ETV Bharat / state

போக்சோ சட்டத்தில் கைதான இளைஞருக்கு முன்பிணை - madras HC grant bail for a youth booked under pocoso

குழந்தைகள் ஆபாசப் படத்தை பதவிறக்கம் செய்து பரப்பிய தொடர்பாக, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட இளைஞருக்கு முன்பிணை வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

madras-hc-grant-bail-for-a-youth-booked-under-pocoso
போக்சோ சட்டத்தில் கைதான இளைஞருக்கு முன்பிணை
author img

By

Published : Jun 18, 2021, 5:24 PM IST

மதுரை: மதுரையைச் சேர்ந்தவர் சாம் இன்பென்ட் ஜோன்ஸ். இவர் இணையதளத்தில் குழந்தைகளின் ஆபாசப் படத்தை பதிவிறக்கம் செய்து நண்பர்களுக்கு பகிர்ந்ததாக தல்லாகுளம் அனைத்து மகளிர் காவலர்கள் போக்சோ, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்பிணை கேட்டு சாம் இன்பென்ட் ஜோன்ஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சாம் இன்பென்ட ஜோன்ஸுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அவர் வழங்கிய உத்தரவில், மனுதாரர் தற்போது முனைவர் பட்டம் படித்துவருகிறார். சம்பவம் ஒரு ஆண்டுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. செல்போன், சிம்கார்டு ஆகியவற்றை காவல்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி அவர் அவற்றை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.

தீவிரமாக அணுகக்கூடிய பிரச்னை

இந்த வழக்கில் மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியதில்லை. கரோனா தொற்றை மனதில் கொண்டு மனுதாரருக்கு முன்பிணை வழங்கப்படுகிறது. அதேநேரத்தில் குழந்தைகள் ஆபாசப் படங்களை பகிர்வது என்பது தீவிரமாக அணுகவேண்டிய பிரச்னை. முதல் முறை தவறில் ஈடுபடுவோர்களுக்கும், டிஜிட்டல் உலகில் தொடர்ந்து ஆபாச படங்களைப் பகிர்ந்து வருவோர்களுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.

போக்சோ சட்டவிதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஒன்றிய, மாநில அரசுகளின் கடமை. இது மட்டும் போதுமானது அல்ல. நல்லொழுக்க கல்வி மட்டுமே இதுபோன்ற குற்றங்களைத் தடுக்கும் அரணாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ’பெற்றோர்களே புரிந்துக்கொள்ளுங்கள்... இவ்வளவு தான் போக்சோ!’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.