திமுகவிலிருந்து மு.க. அழகிரி நீக்கப்பட்ட பிறகு அவ்வப்போது போஸ்டர் மூலம் அவரது ஆதரவாளர்கள் பரபரப்பை ஏற்படுத்துவது வாடிக்கையாகியுள்ளது.
இந்நிலையில் வரும் 30ஆம் தேதி அழகிரியின் பிறந்த நாள் வரவுள்ளதையடுத்து அதற்காக அவர் ஆதரவாளர்கள் மதுரை முழுவதும் ஒட்டிய போஸ்டர்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அந்தப் போஸ்டர்களில் 'sun னோட son னுக்கே தடையா', 'ஒற்றுமையோடு இருந்து ஒற்றுமையாக பயணிப்போம்!' , 'ஆசையில் அபாயகரமானது அதிகார ஆசை அசிங்கமானது துரோக ஆசை' போன்ற வாக்கியங்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த போஸ்டர்கள் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன.
இதையும் படிங்க: பிரசவத்தின்போது தாய் மரணம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு