ETV Bharat / state

வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்த அழகிரி வழக்கு முதன்மை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்! - M K Alagiri parliment election case

மதுரை: 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது வேட்புமனுவில் சொத்து மதிப்பை மறைத்ததாக மு.க. அழகிரி மீது தொடரப்பட்டிருந்த வழக்கு முதன்மை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மு க அழகிரி சொத்து விபரங்களை மறைத்த வழக்கு  மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்த அழகிரி  மதுரை மாவட்டச் செய்திகள்  மு.க. அழகிரி மீதான வழக்கு  madurai district news  M K Alagiri parliment election case  M K Alagiri election case change to Chief Justice bench
M K Alagiri election case change to Chief Justice bench
author img

By

Published : Dec 3, 2019, 9:31 PM IST

கடந்த 2009ஆம் ஆண்டு மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் போது வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்ததாக மு.க. அழகிரி மீது அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் மதுரை முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் 2014ஆம் ஆண்டு தனிநபர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மு.க. அழகிரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், இதே விவகாரம் தொடர்பாக ஜெகநாதன் என்பவர் 25.5.2013ஆம் ஆண்டு திருவாரூர் ஆட்சியரிடம் புகார் அளித்தார். அந்தப்புகாரின் பேரில் ஆட்சியரின் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு 29.10.2013ல் தேர்தல் அலுவலரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதே விவகாரம் தொடர்பாக 2014ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் என் மீது தனிநபர் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். விசாரணையின் போது நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: அரிசி அட்டைகளுக்கு மாறிய பயனாளிகளுக்கு அரிசி வழங்க ரூ. 604 கோடி ஒதுக்கீடு

Intro:மதுரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் போது வேட்பமனுவில் சொத்து விபரங்களை மறைத்ததாக மு.க.அழகிரி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய வழக்கை முதன்மை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.Body:மதுரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் போது வேட்பமனுவில் சொத்து விபரங்களை மறைத்ததாக மு.க.அழகிரி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய வழக்கை முதன்மை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

இந்த வழக்கு தேர்தல் வழக்காக இருப்பதால் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்.

மதுரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் போது வேட்பமனுவில் சொத்து விபரங்களை மறைத்ததாக மு.க.அழகிரி மீது அப்போதைய மதுரை ஆட்சியர் சுப்பிரமணியன் மதுரை முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் 2014-ல் தனிநபர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மு.க.அழகிரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில்,"இதே விவகாரம் தொடர்பாக ஜெகநாதன் என்பவர் 25.5.2013-ல் திருவாரூர் ஆட்சியரிடம் புகார் அளித்தார். அந்தப்புகாரின் பேரில் ஆட்சியரின் உத்தரவின் பேரி்ல் விசாரணை நடத்தப்பட்டு 29.10.2013-ல் தேர்தல் அலுவலரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதே விவகாரம் தொடர்பாக 2014-ல் தனிநபர் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் என் மீது தனிநபர் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும். விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். விசாரணையின் போது நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும்"
என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா இந்த வழக்கு தேர்தல் வழக்காக இருப்பதால் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.