ETV Bharat / state

சிறையிலிருந்து விடுதலையானவருக்கு தொழில் தொடங்க கடனுதவி வேண்டும் - நீதிமன்றத்தில் மனு - loan for prisoners case at madurai high court

மதுரை: நீண்ட நாள் சிறையிலிருந்து விடுதலையானவருக்கு தொழில் தொடங்க கடனுதவி வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை
மதுரை
author img

By

Published : Jan 21, 2020, 9:48 PM IST

மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ராஜா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ஆயுள் கைதிகளுக்கும் நீண்ட நாட்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுபவர்களுக்கும் வேறு தொழில் செய்து திருந்தி வாழ்வதற்காக அரசாங்கம் கடனுதவி வழங்கிவருகிறது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் விடுதலை ஆகும் அனைத்து நபர்களுக்கும் கடன் உதவிகள் வழங்குவதில்லை. அவ்வாறு வழங்கப்படும் தொகையும் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அரசு நிர்ணயித்த தொகைதான் வழங்கப்பட்டு வருகிறது.

உதாரணமாக ஒரு கறவை மாட்டிற்கு ரூ.400 ரூபாய் மட்டுமே கடனுதவியாக வழங்கப்படும். ஆனால் தற்போது ஒரு கறவை மாடு வாங்க வேண்டுமெனில் குறைந்த பட்சம் ரூ.35 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை தேவைப்படுகிறது. எனவே, அரசு வழங்கும் இந்த தொகையை வைத்து எந்த தொழிலும் செய்ய இயலாது.

இதே போல், கடந்தாண்டு எம்.ஜி.ஆர். பிறந்த தினத்தை முன்னிட்டு 1,672 ஆயுள் கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கடந்தாண்டு சிறையிலிருந்து விடுதலையானவர்களில் வெறும் 275 பேருக்கு மட்டுமே ரூ.42 லட்சத்து 56 ஆயிரம் கடனாக வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், சிறை மீண்டவர்களில் பலர் மீண்டும் தவறான பாதைக்கு திரும்பும் அபாயம் உள்ளது. எனவே, தொழில் தொடங்க கடன் தொகையை அதிகரித்து தர உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரை சுவாமி, ரவீந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக சிறைத்துறை அலுவலர்கள் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும், வழக்கை 6 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: முறையான பராமரிப்பின்றி இயங்கும் ஆடு, மாடு வதை செய்யும் கூடம்

Intro:நீண்ட நாள் சிறையில் இருந்து
சிறையிலிருந்து
விடுதலையானவருகளுக்கு
தொழில் துவங்க கடனுதவி வழங்க கோரியும் கடன் தொகையையும் அதிகரித்து தர உத்தரவிட கோரிய வழக்கு..Body:நீண்ட நாள் சிறையில் இருந்து
சிறையிலிருந்து
விடுதலையானவருகளுக்கு
தொழில் துவங்க கடனுதவி வழங்க கோரியும் கடன் தொகையையும் அதிகரித்து தர உத்தரவிட கோரிய வழக்கு..

உள்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..

மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ராஜா என்பவர் உயர் நீதி மன்ற மதுரைக்கிளையில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில்,
ஆயுள் கைதிகள் மற்றும் நீண்ட நாட்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுபவர்களுக்கு, வேறு தொழில் செய்து திருந்தி வாழ்வதற்காக அரசு, கடன் உதவி வழங்கி வருகிறது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம்போதிய அளவிற்கு விடுதலை ஆகும் நபர்களுக்கு கடன் உதவிகள் வழங்குவதில்லை. மேலும், அவ்வாறு வழங்கப்படும் தொகையும் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அரசு நிர்ணயித்த தொகைதான் வழங்கப்பட்டு வருகிறது. உதாரணமாக ஒரு கறவை மாட்டிற்கு ரூ.400 ரூபாய் மட்டுமே கடனுதவியாக வழங்கப்படும். ஆனால் தற்போது ஒரு கறவை மாடு வாங்க வேண்டுமெனில் குறைந்த பட்சம் ரூ.35 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை தேவைப்படுகிறது.
அதே போல சிறுதொழில்கள் அனைத்திற்கும் மிக மிக குறைவான தொகையே வழங்கப்படுகிறது. இந்த தொகையை வைத்து எந்த தொழிலும் செய்ய இயலாது.

இதே போல், கடந்தாண்டு எம்.ஜி.ஆர். பிறந்த தினத்தை முன்னிட்டு , 1672 ஆயுள் கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் கடந்தாண்டு சிறை மீண்டவர்களில் வெறும் 275 பேருக்கு மட்டுமே ரூ.42 லட்சத்து 56 ஆயிரம் மட்டுமே கடனாக வழங்கப்பட்டுள்ளது.

ஆகையால், இந்த சிறை மீண்டவர்களில் பலர் மீண்டும் தவறான பாதைக்கு திரும்பும் அபாயம் உள்ளது. எனவே இது போல் சிறையில் மீண்டவர்களில் பெரும்பாலானோருக்கு தொழில் துவங்க கடனுதவி வழங்குவதுடன், கடன் தொகையையும்,அதிகரித்து தர உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் துரை சுவாமி, ரவீந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.