மத்திய அரசின் அனுமதியின்படி, 61 நாள்களுக்குப் பிறகு உள்நாட்டு விமான சேவைகள் நிபந்தனைகளுடன் தொடங்கப்பட்டன. ஆனால் மாநிலங்களின் கெடுபிடியாலும், கட்டுப்பாடுகளாலும் விமான பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.
அதைத்தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் சென்னை, டெல்லி, பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு 12 விமான சேவைகள் தொடங்கப்பட்டன.
அந்த 12 விமான சேவைகளில் போதிய பயணிகள் இல்லாததால் 10 விமான சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
அதன்படி இன்று காலை 11 மணிக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் சென்னையிலிருந்து மதுரைக்கும், 11.30 மணிக்கு மதுரையிலிருந்து சென்னைக்கும் என இரண்டு விமான சேவைகள் மட்டுமே செயல்படுகின்றன.
இதையும் படிங்க: வந்தே பாரத் திட்டம் : மீண்டும் சேவையை தொடங்குகிறதா ஜெட் ஏர்வேஸ்?