பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக நடைப்பெற்ற பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு பெண் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் தேவசேனா கூறுகையில்,
பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக நடைப்பெற்ற பாலியல் வன்கொடுமையில் கைது செய்தவர்களை மட்டும் குற்றவாளியாக காண்பித்து இந்த வழக்கை முடிக்க போகிறார்களா, இல்லை இதில் அதிகம் தொடர்பு உள்ளவர்களையும் கைது செய்ய போகிறார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த சம்பவத்தால் பாதிப்படைந்த பெண்களுக்கு எந்த அளவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்கள் மீது போஸ்கோ சட்டமும் போடப்பட வேண்டும். பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிப்படைந்த அனைத்து பெண்களுக்கும் மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் உதவுவார்கள். இந்த வழக்கில் அரசியல்வாதிகள் தலையீடு இல்லை என்று எஸ்பி கூறுவது தவறு. அதை அமைச்சரோ, முதல்வரோ தான் கூறப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு என்பது எந்த நிலையில் உள்ளது என கேள்விஎழுப்பினார்.