மதுரை மாவட்டம் சின்ன உலகானி கிராமத்தைச் சேர்ந்தவர் மயிலு. இவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை, சின்ன உலகானி கிராமத்தில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 17 ஏக்கர் நிலம் உள்ளது.
இதனை, 1972ஆம் ஆண்டு இந்து அறநிலையத்துறை, நான்கு பேருக்கு குத்தகைக்கு விட்டது. குத்தகை ஒப்பந்தத்தின் படி, குத்தகை எடுத்தவர்கள் இறந்துவிட்டால், குத்தகை ஒப்பந்தம் செல்லாது.
அப்படி, அந்த நான்கு பேரும் உயிருடன் இல்லாத நிலையில், அந்நிலங்களை அவர்களின் வாரிசுகள் அனுபவித்து வருகின்றனர். எனவே, அதை மீட்டு தர உத்தரவிட வேண்டுமென கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம்,தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு குறித்து விசாரித்த நீதிபதிகள், நிலத்தை மீட்பது குறித்து இந்து அறநிலையத்துறை இணை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகிய இருவரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: