ETV Bharat / state

'ஏங்க... ஒர்க் ஷாப் தொழிலுக்கு பெண்கள் வரக்கூடாதா..?' - வல்கனைசிங் வேலையில் அசத்தும் குட்டியம்மாள் - நாகமலை புதுக்கோட்டை

’பெண்கள் விமானம், ரயில், கப்பல் ஒட்டலாம். வக்கீல், நீதிபதி, அரசியல்வாதி ஆகலாம். ஆனால், வாகனங்களுக்கு வல்கனைசிங் செய்யும் ஒர்க் ஷாப் தொழிலை பெண்கள் செய்யக்கூடாதா என்ன..?' என்று நறுக்கென கேள்வி எழுப்பும் குட்டியம்மாள் அசாத்தியமான பெண்மணி தான். கணவர் இறந்த பின்னர் திக்கற்று நின்றபோது 'யூ டியூப்' வீடியோக்களின் வாயிலாகத் தொழிலைக் கற்ற இவர் இன்று ஆண்களுக்கு இணையாக அசத்துகிறார். அவர் குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு.

வல்கனைசிங் வேலையில் அசத்தும் குட்டியம்மாள்

author img

By

Published : Feb 14, 2023, 9:52 PM IST

வல்கனைசிங் வேலையில் அசத்தும் குட்டியம்மாள்

மதுரை: நாகமலை புதுக்கோட்டை அருகே நிலையூர் கால்வாய்க் கரையில் 'மாதா வல்கனைசிங்' என்ற பெயரில் ஒர்க் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார், குட்டியம்மாள். அப்பகுதியைக் கடந்து செல்கின்ற பலரின் விழிகளை விரிய வைக்கும் சுறுசுறுப்பான உழைப்பு, கனிவோடு வாடிக்கையாளர்களை வரவேற்கும் பக்குவம், ஒரு பெண்ணால் இந்த வேலையைச் செய்ய முடியுமா..? என்று வியக்க வைக்கும் தொழில் நேர்த்தி... இதுதான் குட்டியம்மாள்.

'நீங்க மதுரை முழுக்க தேடிப்பார்த்தாலும் வல்கனைசிங் தொழில் செய்யுற ஒரு பெண்ணைக்கூட பாக்க முடியாது. இவங்களப் பாத்தா எனக்கு அதிசயமாத்தான் தெரியுது. ஆண்கள் மட்டுமே பார்க்க முடிந்த ஒரு வேலைய துணிச்சலா இவங்க செய்யுறாங்க... அதுக்கு நாமெல்லாம் முழு ஆதரவ தரணும்' என்கிறார், வெல்டர் சந்திரன்.

திருநெல்வேலியைச் சேர்ந்த குட்டியம்மாள் தனது கணவரை திருமணம் செய்து கொண்ட பின்னர் நாகமலை புதுக்கோட்டையில் இரண்டு குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறார். 5ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்.

பலருக்கு நம்பிக்கை தரும் குட்டியம்மாவிடம் பேசியபோது, 'எனக்கு இந்த தொழிலைப் பத்தி ஒன்னும் தெரியாது. திடீர்னு மூளையில ஏற்பட்ட ரத்தக்கசிவால என்னோட கணவர் தர்மராஜ் 4 ஆண்டுகளுக்கு முன்னால இறந்துட்டாரு. ரெண்டு பிள்ளைங்களோட திக்குத் தெரியாத காட்டுக்குள்ள தள்ளுன மாதிரி என் வாழ்கை மாறிப்போச்சு. அப்போ கையில இருந்தது வெறும் 500 ரூபா தான். இத வச்சிகிட்டு எங்க வாழ்றது. அப்போ, ஒவ்வொரு நாளும் ஒரு யுகமா கழிஞ்சுது' என்கிறார் கண்ணீருடன்.

மற்றொரு வாடிக்கையாளர் ஆறுமுகம் கூறுகையில், 'என்னைப் போன்றே குட்டியம்மாளின் கணவரும் மாற்றுத்திறனாளி தான். அவரு என்னோட நண்பர். அவரோட தொழிலதான் இவங்க செஞ்சுகிட்டு வர்றாங்க. சாத்தியமில்லாத தொழிலை பெண்ணா இருந்து செய்யுறத, இந்த சமூகம் ஆதரிக்கணும். அவங்க மேற்கொண்டு முன்னேறதுக்கு உதவி செய்யணும். அரசாங்கம் இது மாதிரியான பெண்களுக்கு கண்டிப்பா உதவணும்' என்கிறார்.

தன்னுடைய கணவர் இறந்ததற்குப் பின்னர் யூ-டியூப் மூலமாக ஒர்க் ஷாப் மற்றும் வல்கனைசிங் பற்றி தெரிந்து கொண்டு தானாகக் கற்றுக் கொண்டதை பெருமையோடு பகிர்ந்து கொள்கிறார், குட்டியம்மாள். 'நான் இந்த தொழிலை செய்யப்போறேன்னு சொன்னபோது, எனக்கு எந்தவித ஆதரவுமில்ல. பொம்பள எப்படி செய்ய முடியும்னுதான் எல்லாரும் எங்கிட்டயே பேசுனாங்க. ஆனா, ஏன் பொம்பளைன்னால முடியாதாங்கற வைராக்கியத்தோட கத்துக்கிட்டேன். இன்னைக்கு இந்தப் பகுதியில தொழில சரியா செய்யுற பொண்ணுங்குற பேர எடுத்துருக்கேன்' என்கிறார்.

வாடிக்கையாளர் ரமேஷ் கூறுகையில், ''இந்தத் தொழிலுக்கு பெண்கள் வர்றது ரொம்ப அபூர்வம்தான். அவங்களோட கணவர் கிட்ட நான் வாடிக்கையாளரா இருந்தேன். இப்ப இவங்ககிட்ட தொடர்ந்து என்னோட வாகனங்களைக் கொண்டு வர்றேன். இத நாம ஊக்குவிச்சாதான், பெண்கள் இந்த தொழிலுக்கு ஆர்வமா வருவாங்கன்னு நான் நம்புறேன்'' என்கிறார்.

தொடர்ந்து நிலையான வருமானம் இருக்காது; அவ்வப்போது தொழில் 'டல்'லடிக்கும்; ஆனால், கடை வாடகை ரூ.3 ஆயிரம், மின் கட்டணம் ரூ.2 ஆயிரம் எனக் கொடுத்தது போக எஞ்சிய வருமானத்தைக்கொண்டு தனது இரண்டு பிள்ளைகளோடு குடும்பம் நடத்தும் குட்டியம்மாள், விதவைகளுக்கான உதவித் தொகையைப் பெறுவதற்கு அரசாங்கத்திடம் தொடர்ந்து போராடி வருவதாக வேதனையுடன் தெரிவிக்கிறார்.

தமிழ்நாடு அரசிடம் ஏதேனும் கோரிக்கை இருக்கிறதா..? என நாம் கேட்ட கேள்விக்கு, 'ஆமாங்க சார்... இந்தப் பகுதியிலேயே அரசு புறம்போக்குல ஏதாவது ஒரு இடம் ஒதுக்கிக் கொடுத்தாங்கன்னா ரொம்ப நல்லாருக்கும். ரெண்டு புள்ளைங்கள படிக்க வைக்க ரொம்ப சிரமப்படுறேன். முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா மனசு வச்சா நல்லாருக்கும்' என்று வேண்டுகோள் வைக்கிறார்.

வல்கனைசிங் செய்யும் வளைக்கரம் குட்டியம்மாள், ஆண்களின் ஆதிக்கம் மிகுந்த ஒரு தொழிலில் வாடிக்கையாளரை ஈர்த்து, பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து வருகிறார். அவரது நியாயமான வேண்டுகோளுக்கு மதுரை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் தான் செவி சாய்க்க வேண்டும்.

இதையும் படிங்க: கிருத்திகா பட்டேலை கேரளா வழியாக 5 கார்களில் மாற்றி குஜராத்திற்கு கடத்தியுள்ளனர் - அரசு தரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.