மதுரை மாவட்டம் குன்னத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன் உள்பட இருவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்யும்வரை உடல்களை வாங்கமாட்டோம் என கூறிவந்த உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இருவரின் உடல்களும் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே, குன்னத்தூர் ஊராட்சி மன்ற செயலாளர் வீரணன் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தனர்.
தற்போது, அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவரும் சூழலில், வீரணனின் வீட்டை ஊர் பொதுமக்கள் அடித்து நொறுக்கி தீ வைத்துள்ளனர். இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
இதையும் படிங்க: குன்னத்தூர் இரட்டை கொலை: இரண்டு நாள்களுக்குப் பின் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைப்பு!