கன்னோஜ் / உத்தர பிரதேசம்: கண்காட்சிக்கு சென்ற சிறுமி சுழலும் பெரிய ராட்டினத்தில் ஏறியுள்ளார். அப்போது, எதிர்பாராவிதமாக அவரது முடி சுழலும் ராட்டினத்தில் சிக்கி விபத்து நிகழ்ந்துள்ளது. ராட்டினம் வேகமாக சுழலும் என்பதால், தோலோடு சிறுமியின் முடியைப் சக்கரம் பெயர்த்து எடுத்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதோனகர், தல்கிராமில் உள்ள கிராம விழாவிற்குச் சென்ற 15 வயது சிறுமிக்கு தான் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. தலைமுடி இரும்பு கம்பியில் சிக்கிக் கொண்டதால் பலத்த காயமடைந்தார். இது விழாக்களில் பயன்படுத்தப்படும் பொழுதுபோக்கு சவாரிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
சிறுமிக்கு நடந்த சோகம்
இந்த விழாவில் பங்கேற்ற பல குழந்தைகளுடன் சேர்ந்து அந்த சிறுமியும் ராட்டின சவாரிக்காக காத்திருந்தார். திடீரென, சவாரி சுழலத் தொடங்கியபோது, அவர் முடி சிக்கிக்கொண்டது. அலறித் துடித்த சிறுமி, வலியுடன் தவித்த நிலையிலும், ராட்டினம் நிற்கும் வரை அவரது முடி அதிலிருந்து விடுபடவில்லை. அதற்குள் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, தோலுடன் சேர்த்து தலைமுடி பறிக்கப்பட்டது.
இந்த விபத்தை கண்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர். சிலர் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், இதுபோன்ற விழாக்களில் எடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கேள்விகளை எழுப்பியது.
முதலில் சிறுமிக்கு அருகில் இருந்த மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர், மேம்பட்ட சிகிச்சை அளிக்க கன்னோஜிலிருந்து லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரிக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டார்.
காவல்துறை விசாரணை
தல்கிராம் காவல் நிலைய அலுவலர் சசி காண்ட் கனௌஜியா, இந்த சவாரியை நடத்திய கரண் காஷ்யப்பிற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய காவல் அலுவலர் கனௌஜியா, "இந்த சவாரிகளை நடத்தும் அதன் உரிமையாளரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து எப்படி நடந்தது என்பதை அறிந்துகொள்ள மேம்பட்ட விசாரணை நடந்து வருகிறது," என்று தெரிவித்தார்.
கடுமையான நடைமுறைகள்
இந்த விபத்து, இந்தியாவில் உள்ள உள்ளூர் விழாக்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களில் உள்ள சவாரிகளின் பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் இயக்க நடைமுறைகள் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. பெரிய சக்கரத்துடன் வரும் ராட்டினம் போன்ற சவாரிகள், விபத்துகளைத் தடுக்கும் நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
என்னை பயங்கரவாதியாக மாற்றி இருப்பார்கள்? சட்டசபையில் ஜம்மு காஷ்மீர் எம்.எல்.ஏ!
இதுபோன்ற விபத்துகள், நிலையான இயக்க நடைமுறைகள், தவறான பராமரிப்பு மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. தலைமுடி, நகைகள் மற்றும் தளர்வான ஆடைகளைப் பாதுகாத்தல், தெளிவான பாதுகாப்பு அறிகுறிகள் போன்ற அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறிய விழாக்களில் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. இது தீவிர விபத்தை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
பாதுகாப்பு நிபுணர்கள், இதுபோன்ற விபத்துகள் உள்ளூர் விழாக்களில் கடுமையான விதிமுறைகளை வலியுறுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.