ETV Bharat / state

எழுதலிலும் மறைதலிலும் சிவனை வணங்கும் கதிரவன் - பாண்டியர் கால குடைவரைக் கோயிலின் அற்புதம்!

author img

By

Published : Oct 2, 2019, 8:28 AM IST

மதுரை: குன்னத்தூர் செல்லும் வழியில் எழும்போதும், மறையும்போதும் சூரியன் வந்து வணங்கிச்செல்லும் சிவன் வீற்றிருக்கும் கோயில் ஒன்று பாண்டியர்கால குடைவரைக் கலைநயத்தை இப்போதும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

Asthagiriswarar cave temple, Madurai

எழுதலின்போதும் மறைதலின்போதும் சூரியன் வந்து வணங்கிச் செல்லும் சிவன் கோயில் ஒன்று மதுரைக்கு அருகேயுள்ளது. பாண்டியர் கால குடைவரைக் கலைநயத்தை இப்போதும் அந்தக் கோயில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

கோயிலின் அமைவிடம்:

மதுரை மாவட்டம் வரிச்சியூரிலிருந்து வலதுபுறம் களிமங்கலம் செல்லும் சாலையின் பிரிவிலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள குன்னத்தூர் கிராமத்தில்தான் இந்தக் கோயில் அமைந்துள்ளது. குன்னத்தூருக்குச் செல்லும் வழியில், சற்று முன்பாக குன்னத்தூர் குன்று அமைந்துள்ளது. பாண்டியர் காலக் குடைவரைக் கோயில்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் பெருமைக்குரிய இடம் இது. இங்குதான் சிவன் பல்வேறு பெயர்களில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு காலத்தில் சுப்பிரமணியர் மலை என்று அழைக்கப்பட்ட இக்குன்றின் கிழக்குப்புறத்தில் வீற்றிருக்கும் சிவனை எழும் ஞாயிறும் (உதயசூரியன்) மேற்குப்புறத்தில் வீற்றிருக்கின்ற சிவனை மறையும் ஞாயிறும் (அஸ்தமன சூரியன்) நாள்தோறும் தோன்றி வணங்கி மறைகிறார்கள் என்பது வியப்பிற்குரிய ஒன்று.

Asthagiriswarar cave temple, Madurai
குன்னத்தூர் குடைவரை கோயில்

கோயிலின் நேர்த்தி:

கோயிலின் முள்வேலிக் கம்பியைக் கடந்து நாம் உள்ளே சென்றோமானால், இந்தப் பாண்டியர்காலக் குடைவரைக் கோயிலின் அழகு அத்தனை நேர்த்தியுடன் ஜொலிக்கிறது. மலையைக் குடைந்து, மலைப் பாறையாலேயே லிங்கமும் ஆவுடையும் நேர்த்தியாய் செதுக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் மூன்று அடி, விட்டம் நான்கடியாகும். இங்கு தினந்தோறும் அதிகாலையில், கிழக்கே எழும் சூரியக் கதிர்களால் தங்கமயமாய் ஜொலிக்கிறார் இங்கே வீற்றுள்ள தென்னாடுடைய சிவன். உதயகிரீஸ்வரர் என்ற பெயரால் அழைக்கப்படும் இந்த அழகிய குடைவரைக் கோயிலின் வாயிலில் இரண்டு துவாரபாலகர்கள் காவல் காக்கின்ற புடைப்புச்சிற்பம் அத்தனை அழகாய் அமைந்துள்ளது. கோயிலின் இடதுபுறம் விநாயகர் நின்ற கோலத்தில், அற்புதமான தோற்றத்தில் நம்மை ஈர்க்கிறார். மேலும் கருவறையின் நேரெதிரே அமைந்துள்ள நந்தி சிலை, தரையைப் பார்த்தபடி இருப்பது சற்றே வித்தியாசமாக உள்ளது.

Asthagiriswarar cave temple, Madurai
லிங்கம்

கோயிலுக்கு வெளியே உள்ள நந்தி, வலது பக்கம் தலையைத் திருப்பியவாறு உள்ள காட்சி வேறு எந்தக் கோயிலிலும் காணமுடியாத ஒன்று. மலையின் பின்புறம் லிங்கம் மற்றும் ஆவுடையோடு அஸ்தகிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். முன் மண்டபம், கருவறை மண்டபம் என சிவன் இங்கே ஏகாந்தமாக வீற்றிருக்கிறார். மாலைப்பொழுதில் கதிரவன், அஸ்தகிரீஸ்வரரிடம் அருளாசி பெற்று மறைவதை காண கண்கோடி வேண்டும்.

தலம் வரலாறு:

இக்குடைவரைக்கோயில், கி.பி. 8ஆம் நூற்றாண்டில் பிற்காலப் பாண்டியர்களால் கட்டப்பட்டது எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் உதயகிரீஸ்வரர் கோயில் குறித்த விளக்கங்களோடு கூடிய பெயர்ப்பலகையும் கல்வெட்டும் தமிழ்நாடு தொல்லியல் துறையால் பொறிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று கீழிருந்து, ஏறக்குறைய 300 அடி உயரத்தில் சிதிலமடைந்து காணப்படும் செங்கல் கட்டுமானத்திலான மூலபாலசிவன் கோயில், ஒரு காலத்தில் சீரும் சிறப்பும் வாய்ந்ததாகத் திகழ்ந்திருக்க வேண்டும் என்பதை அதன் நேர்த்தியும் தொன்மையும் சொல்லாமல் சொல்லுகின்றன.

Asthagiriswarar cave temple, Madurai
அஸ்தகிரீஸ்வரர் நந்தி சிலை

கோயிலின் சுற்றுவட்டாரப் பகுதிகள்:

அப்படியே மலையை கிரிவலமாகச் சுற்றிவந்து, மீண்டும் உதயகிரீஸ்வரர் கோயிலுக்கு மிக அருகில் அமைந்துள்ள அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க குகைக் கோயிலை நோக்கி நடந்துசெல்லும்போது அவ்வழியே அமைந்துள்ள மற்றுமொரு சிவன் கோயில் மிகவும் சிதிலமடைந்து கிடக்கிறது. ஆனாலும் நம் மக்கள் அதனையும் அழகுறப் பேணி, அங்கே சிவலிங்க வழிபாட்டோடு, குலதெய்வ வழிபாட்டிலும் ஈடுபட்டு வருகிறார்கள். தாமரைக் குளத்தை ஒட்டிய இச்சிவன் கோயிலின் முன்புறம், சப்தகன்னியர் குளத்தைக் கண்காணித்தவாறே வீற்றிருக்கிறார்கள் என்பது மற்றுமொரு சிறப்பு.

அருகேயுள்ள குகைக்கோயில் ஒன்றில், ஒருகாலத்தில் ஜைன முனிவர்கள் தங்கி தங்களின் ஆன்மிகச் சேவையோடு, கல்விச்சேவை, மருத்துவச் சேவையினை இக்குன்றினைச் சுற்றி வாழ்ந்த மக்களுக்கு ஆற்றியிருக்கிறார்கள். அவர்கள் தங்கிய 50-க்கும் மேற்பட்ட கற்படுக்கைகள், மருந்துக்குழிகள் உள்பட அவர்கள் தங்கியதற்கான எச்சங்களும் இங்கே தென்படுகின்றன.

Asthagiriswarar cave temple, Madurai
குடைவரைக் கோயில் குன்னத்தூர், லிங்கம்

இதன் அருகே அமைந்துள்ள கோயிலில் உலகநாதனாய் மற்றொரு சிவன் கருவறையிலிருந்துக் காட்சி தருகிறார். அவருக்கு எதிரே தண்டீஸ்வரர், காலபைரவர், நாகராஜா ஆகியோர் உள்ளனர். உலகநாதன் கருவறை கொண்டுள்ள கோயிலுக்கு அருகே, முருகர் கருவறையில் குடிகொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். உலகநாதன் கோயிலுக்குப் பின்புறம் சித்தர்கள் இருவர் ஜீவசமாதி அடைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் நம்புகிறார்கள். சமாதிக்குரிய அமைப்புடன் உள்ள அவ்விடத்தை, நாள்தோறும் அப்பகுதி மக்கள் பூஜித்து வருகிறார்கள்.

பக்தர்கள் தரிசனம்:

ஒவ்வொரு நாளும் காலை 6 மணியிலிருந்து மாலை 5 மணிவரை கோயில் பக்தர்களின் சேவைக்காகத் திறந்துவைக்கப்படுகிறது என்று அக்கோயிலின் பூசாரி ராமலிங்கம் கூறுகிறார். இங்குள்ள மலைக்கோயில்களை பரம்பரை, பரம்பரையாய் நிர்வகித்து வருகின்ற பரமேஸ்வரன் பேசுகையில், ”இங்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் மூன்றிலிருந்து பத்து திருமணங்கள்வரை நடைபெறுகின்றன. திருமணங்கள் அதிகம் நடைபெறுகின்ற காரணத்தால் திருமண மண்டபம் ஒன்று கட்டித்தர மதுரை மாவட்ட ஆட்சியரிடமும் மதுரை மக்களவை உறுப்பினரிடமும் கோரிக்கை வைத்துள்ளோம். அது நிறைவேறினால் எங்களது பெருங்குறை தீரும்” என்றும் கூறினார்.

kunnathur-asthagiriswarar-cave-temple

மதுரை வானொலி நிலையத்தின் முன்னாள் இயக்குநர் சோமாஸ்கந்தமூர்த்தி கூறுகையில், "அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி என்று போற்றப்படும் மீனாட்சிம்மன் கோயில் மட்டுமே மதுரையின் அடையாளம் என்பதோடு நின்றுவிடாமல், மதுரையைச் சுற்றியுள்ள இப்புனிதத் தலங்களையும், குறிப்பாக எழும் ஞாயிறும் மறையும் ஞாயிறும் ஒருசேர சிவனை தரிசிக்கின்ற கோயில்களும் மதுரையின் அடையாளங்களில் ஒன்றுதான் என்பதை உணர்ந்து ஆன்மிகப் பெருமக்களும் சரி, சுற்றுலாச் சென்று அதன்மூலம் இன்புறுகின்ற பயணிகளுக்கும் சரி மிக அற்புதமான ஒரு தலம்தான் இந்தக் குன்னத்தூர் குன்று" என்று மனம் நெகிழக் கூறி இப்பயணத்தை முடித்துவைத்தார்.

இதையும் படிங்க:

கொள்ளை முயற்சி முறியடித்த கோயில் அலாரம்!!

Intro:உதயத்திலும் அஸ்தமனத்திலும் சூரியன் வணங்கும் சிவன் - பாண்டியர் கால குடைவரைக் கோவிலின் அற்புதம்

உதயத்தின்போதும் அஸ்தனத்தின்போதும் சூரியன் வணங்கிச் செல்லும் மதுரைக்கு அருகேயுள்ள சிவன் கோவில் ஒன்று பாண்டியர் கால குடைவரைக் கலை நயத்தை இப்போதும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.Body:உதயத்திலும் அஸ்தமனத்திலும் சூரியன் வணங்கும் சிவன் - பாண்டியர் கால குடைவரைக் கோவிலின் அற்புதம்

உதயத்தின்போதும் அஸ்தனத்தின்போதும் சூரியன் வணங்கிச் செல்லும் மதுரைக்கு அருகேயுள்ள சிவன் கோவில் ஒன்று பாண்டியர் கால குடைவரைக் கலை நயத்தை இப்போதும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

மதுரை மாவட்டம் வரிச்சியூர் அருகே உள்ளது. சிவகங்கை சாலையில் மதுரையிலிருந்து 15 கி.மீ. தொலைவு. வரிச்சியூரிலிருந்து வலதுபுறம் களிமங்கலம் செல்லும் சாலையின் பிரிவிலிருந்து 3 கி.மீ. தொலைவில்தான் தற்போது நாம் காணப்போகும் குன்னத்தூர் கிராமம் உள்ளது.

குன்னத்தூருக்கு சற்று முன்பாக உள்ள அழகிய குன்றுதான் குன்னத்தூர் குன்று. பாண்டியர் காலக் குடைவரைக் கோவில்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தொல்லியல் பெருமைக்குரிய இடம் இஃது. இங்குதான் சிவன் பல்வேறு பெயர்களில் வெவ்வேறு கோயில்களில் அருளாட்சி செய்து கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் சுப்பிரமணியர் மலை என்று அழைக்கப்பட்ட இக்குன்றின் கிழக்குப் புறத்தில் வீற்றிருக்கும் சிவனை நாள் தோறும் உதய சூரியரும் மேற்குப் புறத்தில் வீற்றிருக்கின்ற சிவனை அஸ்தமன சூரியரும் வணங்கித் தோன்றி மறைகிறார்கள் என்பது வியப்பிற்குரிய ஒன்று.

முள்வேலிக் கம்பியைக் கடந்து உள்ளே சென்றால் பாண்டியர் காலக் குடைவரைக் கோவிலின் அழகு அத்தனை பெருமிதத்துடன் ஜொலிக்கிறது. மலையைக் குடைந்து, குடைந்த அந்த மலைப் பாறையாலேயே லிங்கமும், ஆவுடையும் நேர்த்தியாய் செதுக்கப்பட்டுள்ளது. அதன் உயரம் மூன்று அடி விட்டம் நான்கடியாகும்.

அதிகாலையில் கிழக்கே எழும் சூரியக் கதிர்களால் தங்கமாய் ஜொலிக்கிறார் தென்னாடுடைய சிவன். உதயகிரீஸ்வரர் என்ற பெயரால் அழைக்கப்படும் இந்த அழகிய குடைவரைக் கோவிலின் வாயிலில் இரண்டு துவாரபாலகர்கள் காவல் காக்கின்ற புடைப்புச் சிற்பம் அத்தனை அழகு. குடைவரைக் கோவிலின் இடது பக்கவாட்டில் விநாயகர் நின்ற கோலத்தில் அற்புதமான தோற்றத்தில் நம்மை ஈர்க்கிறார். கருவறையின் நேர் எதிரே அமைந்துள்ள நந்தி சிலை தரையைப் பார்த்தபடி இருப்பது சற்றே வித்தியாசமாக உள்ளது.

இக் குடைவரைக்கோவில் கி.பி.8ஆம் நூற்றாண்டில் பிற்காலப் பாண்டியர்களால் கட்டப்பட்டது என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உதயகிரீஸ்வரர் கோவில் குறித்த விளக்கங்களோடு கூடிய பெயர்ப்பலகையும் கல்வெட்டும் தமிழக தொல்லியல்துறையால் பொறிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று கீழிருந்து சற்றேறக்குறைய 300 அடி உயரத்தில் சிதிலமடைந்த செங்கல் கட்டுமானத்தில் காணப்படும் மூலபாலசிவன் கோவில் ஒரு காலத்தில் சீரும் சிறப்பும் வாய்ந்ததாகத் திகழ்ந்திருக்க வேண்டும் என்பதை அதன் நேர்த்தியும், தொன்மையும் சொல்லாமல் சொல்லுகின்றன. கோவிலுக்கு வெளியே உள்ள நந்தி, ஏனோ வலது பக்கவாட்டில் தலையைத் திருப்பியவாறு உள்ள காட்சி வேறு எந்தக் கோவிலிலும் காண முடியாதது.

மலையின் பின்புறம் லிங்கம் மற்றும் ஆவுடையோடு அஸ்தகிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். மிக மிக நேர்த்தியான பாண்டியர் குடைவரைதான். அழகு.. அழகு... பேரழகு... என்ற சொல்லைத் தாண்டி தமிழில் சொற்கள் கிடைக்கவில்லை. முன் மண்டபம், கருவறை மண்டபம் என சிவன் ஏகாந்தமாக வீற்றிருக்கிறார். மாலை மேற்கில் மறையும் சூரியன் அஸ்தகிரீஸ்வரரிடம் அருளாசி பெற்றே மறைகிறார் என்பதைக் காண கண்கோடி வேண்டும்.

அப்படியே மலையை கிரி வலமாகச் சுற்றி வந்து, மீண்டும் உதயகிரீஸ்வரர் கோவிலுக்கு மிக அண்மையில் அமைந்துள்ள அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க குகைக் கோவிலை நோக்கி நடக்கிறோம். அவ்வழியே அமைந்துள்ள மற்றொரு சிவன் கோவில் மிகவும் சிதிலடைந்து கிடக்கிறது. ஆனாலும் நம் மக்கள் அதனையும் அழகுற பேணி அங்கே சிவலிங்க வழிபாட்டோடு குலதெய்வ வழிபாட்டையும் செய்து வருகிறார்கள். தாமரைக் குளத்தை ஒட்டிய இச் சிவன் கோவிலின் முன்புறம் சப்தகன்னியர் குளத்தைக் கண்காணித்தவாறே வீற்றிருக்கிறார்கள் என்பது மற்றொரு அழகு.

அருகேயுள்ள குகைக் கோவில் ஒன்றில் ஒருகாலத்தில் ஜைன முனிவர்கள் இங்கே தங்கி தங்களின் ஆன்மீகச் சேவையோடு, கல்வி சேவை, மருத்துவ சேவையை இக்குன்றினைச் சுற்றி வாழ்ந்த மக்களுக்கு ஆற்றியிருக்கிறார்கள். மருந்துக்குழிகள் உட்பட அதற்கான எச்சங்கள் இங்கே தென்படுகின்றன. அவர்கள் தங்குவதற்காக 50-க்கும் மேற்பட்ட கற்படுக்கைகளும், கிழக்குப் பார்த்த இந்தக் குகையின் மேற்புறம் மழைநீர் வழியாமல் இருப்பதற்காக புருவ வெட்டும், அதன் மேற்புறமாக இந்தக் குகையில் படுக்கை செய்து கொடுத்தவர் குறித்தும், அங்கே வாழ்ந்தவர்களுக்கு நெல் காணிக்கை அளித்த தகவலும் 'தமிழிக் கல்வெட்டுகளாய்' பொறிக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள முந்து தமிழ்க் கல்வெட்டுகளின் காலம் கி.மு.3-ஆம் நூற்றாண்டு என தொல்லியல் அறிஞர்களால் கணிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு சில எழுத்துக்கள் சிதைந்துவிட்டாலும் கிடைத்த எழுத்துக்களைக் கொண்டு அது தருகின்ற செய்தியையும் காலப் பின்னணியையும் உலகிற்குத் தெரியப்படுத்தும் வண்ணம் தொல்லியல் துறை அதனை பலகையில் எழுதி வைத்து பொதுமக்கள் அறிய காட்சிப்படுத்தியுள்ளது. மேலும் குகையின் உள்ளே படுக்கைகள் உள்ள பகுதியொன்றில் கி.பி.15ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் காலத்தில் உள்ள தற்காலத் தமிழ்க் கல்வெட்டு ஒன்றில் 'வரிச்சியூர்' என்ற பெயர் காணப்படுகிறது.

அதன் அருகே அமைந்துள்ள கோவிலில் உலகநாதனாய் மற்றொரு சிவன் கருவறையில் இருந்து காட்சி தருகிறார். அவருக்கு எதிரே தண்டீசுவரர், காலபைரவர், நாகராஜா ஆகியோர் உள்ளனர். உலகநாதன் கருவறை கொண்டுள்ள கோவிலுக்கு அருகே முருகர் கருவறையில் குடிகொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். உலகநாதன் கோவிலுக்குப் பின்புறம் சித்தர்கள் இருவர் ஜீவசமாதி அடைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் நம்புகிறார்கள். சமாதிக்குரிய அமைப்புடன் உள்ள அவ்விடத்தை நாள்தோறும் பூசித்து வருகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் காலை 6 மணியிலிருந்து மாலை 5 மணி வரை கோவில் பக்தர்களின் சேவைக்காகத் திறந்து வைக்கப்படுகிறது என்று அக்கோவிலின் பூசாரி ராமலிங்கம் கூறுகிறார். பிரதோஷ நாட்களிலும் முழு நிலவு நாளன்றும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள் என்று சொல்லும் அவர், அந்நாட்களில் பொங்கல், புளியோதரையை சிவனுக்குப் படையலிட்டு வருகின்ற பக்த கோடிகளுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது என்கிறார்.

இங்குள்ள மலைக்கோவில்களை பரம்பரை பரம்பரையாய் நிர்வகித்து வருகின்ற பரமேஸ்வரன் கூறுகையில், இங்கு மாதந்தோறும் குறைந்த பட்சம் மூன்றிலிருந்து பத்து திருமணங்கள் வரை நடைபெறுகின்றன. இங்கு திருமணம் செய்கின்ற தம்பதியர் ஒரு போதும் மணவிலக்குப் பெரும் நிலைக்குத் தள்ளப்படுவதில்லை. அதேபோன்று அவர்களுக்கு புத்திரபாக்கியமும் இல்லாமல் போனதில்லை என்று பெருமைக் கொள்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், திருமணங்கள் அதிகம் நடைபெறுகின்ற காரணத்தால் திருமண மண்டபம் ஒன்று கட்டித்தர மதுரை மாவட்ட ஆட்சியரிடமும், மதுரை மக்களவை உறுப்பினரிடமும் கோரிக்கை வைத்துள்ளோம். அது நிறைவேறினால் எங்களது பெருங்குறை தீரும் என்கிறார். அதேபோன்று மதுரைக்கு அருகில் பிரதோஷ காலத்தில் மட்டுமன்றி முழுநிலவு நாளன்று கிரிவலம் வருவதற்குரிய அனைத்து வசதிகளும் இங்கே உள்ளன. பொதுமக்கள் நிறைய பேர் வருகை தர வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் பகிர்ந்து கொண்டார்.

மதுரை வானொலி நிலையத்தின் முன்னாள் இயக்குநர் சோமாஸ்கந்தமூர்த்தி கூறுகையில், 'அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி என்று போற்றப்படும் மீனாட்சிம்மன் கோவில் மட்டுமே மதுரையின் அடையாளம் என்பதோடு நின்றுவிடாமல், மதுரையைச் சுற்றியுள்ள இப்புனித தலங்களையும், குறிப்பாக எழு ஞாயிறும் விழு ஞாயிறும் ஒரு சேர சிவனைத் தரிசிக்கின்ற கோவில்களும் மதுரையின் அடையாளங்களில் ஒன்றுதான், என்பதை உணர்ந்து ஆன்மிகப் பெருமக்களும் சரி... சுற்றுலாவாய் சென்று அதன் மூலம் இன்புறுகின்ற பயணிகளுக்கும் சரி மிக அற்புதமான ஒரு தலம்தான் குன்னத்தூர் குன்று' என்கிறார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.