சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக கீழடி அருகேயுள்ள கொந்தகை அகரம், மணலூர் போன்ற பகுதிகளிலும் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கொந்தகையைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று அப்பகுதியில் தோண்டப்பட்ட புதிய குழியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குழந்தையின் எலும்புக்கூடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் உயரம் 75 செ.மீ அளவிற்கு உள்ளது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதியைச் சுற்றி வாழ்ந்த மக்களின் ஈமக்காடாக கொந்தகை இருந்துள்ளது. இதனை அடுத்து கீழடி ஆறாம் கட்ட அகழாய்வில் கொந்தகை பகுதியும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பெரிய அளவிலான எலும்புக்கூடு