மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசுகையில்,
சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் தொகுதி மீது அக்கறை செலுத்த வேண்டும் என்கிற நீதிமன்றத்தின் அறிவுரை ஏற்கத் தகுந்தது. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய அனைத்து நலத்திட்டங்களுக்கு, எந்த கட்சியாக இருப்பினும் குரல் கொடுக்க வேண்டும், என்றார்.
தேர்தல் தோல்விக்கு காங்கிரஸில் உள்ள மூத்த தலைவர்கள் யாரும் களப் பணியில் ஈடுபடவில்லை. குறிப்பாக ப.சிதம்பரம் மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு குறித்து கேள்விக்கு, தனக்கு தெரியாது. அது பற்றி கருத்து கூற விரும்பவில்லை, என்று மறுத்துவிட்டார்.
மேலும், பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெறுவதும், தோல்வி பெறுவதும் சகஜமான ஒன்றுதான். தமிழகம் மற்றும் கேரளாவில் காங்கிரஸ் மகத்தான வெற்றி அடைந்துள்ளது. வடநாடுகளில் தோல்வியுற்றது குறித்து எவ்வித ஐயப்பாடும் கிடையாது. காங்கிரஸ் கமிட்டி குழு தோல்வி குறித்து காரணம் அறிந்து மீண்டு வருவோம், என்றார்.