மதுரை: காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் வழியில், மதுரை விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கொடநாடு என்றாலே ஆங்கில படத்தை மிஞ்சும் மர்மங்கள்தான் உள்ளன. அங்கு சொத்து வாங்கியது, பின்னர் பார்ட்னர் பிரித்தது, ஜெயலலிதா மரணம் என அனைத்துமே மர்மாக உள்ளன. அந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கொலை செய்ய முயற்சி நடைபெற்றுள்ளது.
மேலும் அங்கு கொலை, கொள்ளை நடந்துள்ளது. இது குறித்த வழக்கினை உயர் நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டு, தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுகிறது. இதிலுள்ள மர்மங்கள் விரைவில் வெளிவர வேண்டும். ஆனால், இந்த கொடநாடு வழக்கை அதிமுக ஏன் எதிர்க்கிறது என புரியவில்லை.
மோடி பிரதமராகவும், நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராகவும் இருக்கும் வரை பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்டவற்றின் விலை குறையாது. பணமதிப்பிழப்பு கொண்டு வந்தபின் நிதி நிலைமை உயராமல் தொடர்ந்து சரிந்து வருகிறது. மாநில அரசு வரி தவிர செஸ் (கலால்) வரி மூலம் நேரடியாக மக்களிடம் ஒன்றிய அரசு வரி விதிக்கிறது. மானியங்கள் வழங்காமல் பிரதமர் மோடி ஆகஸ்ட் 15ஆம் தேதி பல ஆயிரம் கோடி வெற்று திட்டங்களை அறிவிக்கிறார். அதே போல 20 ஆயிரம், 30 ஆயிரம் கோடி என வெற்று அறிக்கையைதான் நிதியமைச்சர் வெளியிடுகிறார் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’மாணவச் செல்வங்களே...மனம் தளராதீர்கள்’ - முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்!