ETV Bharat / state

'சமூக நீதியை புதிய கல்விக் கொள்கை ஒழித்துவிடும்'

மதுரை: புதிய கல்விக் கொள்கை என்பது கல்வி தரத்தை மாற்றக்கூடியதாக இருக்காது, சமூக நீதியை ஒழித்துவிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

கனிமொழி
author img

By

Published : Jul 21, 2019, 5:32 PM IST

மதுரை பழங்காநத்தத்தில் நடந்த தேசியக் கல்விக் கொள்கை வரைவுக்கு எதிரான பரப்புரை கூட்டத்தில் தூத்துக்குடி எம்.பி கனிமொழி கலந்துகொண்டார். அப்போது புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக காட்டமான விமர்சனத்தை முன்வைத்த அவர், "புதிய கல்வி கொள்கை என்பது கல்வி தரத்தை மாற்றக்கூடியதாக இருக்காது. இந்த கொள்கை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் விருப்பமாக உள்ளது. அதுமட்டுமின்றி பாஜக ஆட்சியில் நீடிப்பதற்காகவும் இது உருவாக்கப்பட்டது.

'சமூக நீதியை புதிய கல்விக் கொள்கை ஒழித்துவிடும்'

இந்து நாடாக மாற்ற, இந்தி மொழியை மட்டும் பேச வேண்டும் என்பதற்காக சமூகநீதி என்பதை உடைத்தெறிய வேண்டும் என்பதற்காக புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று வாழும் தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கை என்பது அடிப்படையிலேயே தவறு.

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களின் பெயர்கள் அனைத்தும் புரியாத அர்த்தமற்ற இந்தி மொழியில் இருக்கின்றன. 3ஆம் வகுப்பு மாணவனுக்கு தகுதித் தேர்வு வைக்கக் கூடிய நிலைதான் தற்போது உள்ளது. சமூகநீதி மூலம் கிடைத்த கல்வி உரிமையை புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு பறிக்க முயல்கிறது. இந்த கல்விக் கொள்கையை திமுக தொடர்ந்து எதிர்க்கும்" என்றார்.

Intro:சமூகநீதியை ஒழிக்க கூடியது தான் புதிய கல்விக் கொள்கை கனிமொழி எம்பி பேச்சு

தேசிய கல்வி கொள்கை வரைவுக்கு எதிரான பரப்புரை கூட்டத்தில் மதுரை பழங்காநத்தத்தில் கனிமொழி எம்.பி பேச்சு,Body:சமூகநீதியை ஒழிக்க கூடியது தான் புதிய கல்விக் கொள்கை கனிமொழி எம்பி பேச்சு

தேசிய கல்வி கொள்கை வரைவுக்கு எதிரான பரப்புரை கூட்டத்தில் மதுரை பழங்காநத்தத்தில் கனிமொழி எம்.பி பேச்சு,

புதிய கல்விகொள்கை என்பது கல்வி தரத்தை மாற்றக்கூடியாதாக இருக்காது, இது ஆர்.எஸ்..எஸ்சின் விருப்பம், பாஜக ஆட்சியில் நீட்டிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்து நாடாக மாற்ற, இந்தி மொழியை மட்டும் பேச வேண்டும் என்பதற்காக சமூகநீதி என்பதை உடைத்தெறிய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த கல்வி கொள்கை.

பின்லாந்தில் 7வயதில் தான் மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். தகுதி தேர்வு இல்லை, அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்ககூடிய நிலைதான் தற்போது உள்ளது. புதிய கல்விகொள்கை என்பது 3 வயது குழந்தைகளை பராமரிக்க கூடிய அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து ஆசிரியராக மாற்ற முயற்சிக்கிறது

வழிவழியாக கற்க்கூடிய பழமையான நாகரிகம், நம்பிக்கை, பண்பாட்டை கற்பதில் வர்ணாஸ்ரம தர்மத்தை நம்ப கூடியவர்கள், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வாழும் தமிழகத்தில் புதிய கல்விகொள்கை என்பது அடிப்படையிலேயே தவறு

ராக்ஷ்டிரியா சிக்ஷ்யா ஆயோக் போன்ற
மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களின் பெயர்கள் அனைத்தும் புரியாத அர்த்தமற்ற இந்தி மொழியில் இருக்கிறது.

மத்திய அரசு எந்த நேரத்திலும் நம் மீது தீமைகளை செய்துவிடும் என்பதால் தூங்காமல் விழித்துகொண்டே இருக்க வேண்டி இருக்கிறது. பெரியார் மண்ணான தமிழகத்தில் பாஜகவின் அறிவை கொட்ட வேண்டாம்.

3ஆம் வகுப்பு மாணவனுக்கு தகுதி தேர்வு வைக்க கூடிய நிலை உள்ளது புதிய கல்விகொள்கை. எதிர்கால கல்வித்திட்டத்தை 3ஆம் வகுப்பு படிக்கும் மாணவனே முடிவு செய்ய வேண்டும் என்ற நோக்கிலே செயல்படுகிறது

சமூகநீதி மூலம் கிடைத்த கல்வி உரிமையை புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் பறிக்க முயல்கிறது
தொடர்ந்து இந்த கல்விகொள்கையை திமுக எதிர்க்கும். கல்வி உரிமையை மட்டுமின்றி சமூக நீதியை ஒழிக்ககூடியது புதிய கல்வி கொள்கை.

சினிமாவிற்கு செல்வது போல தற்போது மருத்துவ மாணவர்களுக்கு தகுதி தேர்வு வைக்கப்படுகிறது, நீட்தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்யகூடிய நிலை உள்ளது.

ஆயிரமாயிரம் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் கல்விகொள்கைக்கு எதிராக தமிழகத்தில் உள்ளவர்கள் போராடுவோம்
டெல்லியிலும் இது போன்ற எதிர்ப்புகளை வெளிப்படுத்த வேண்டும்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.