ETV Bharat / state

காமராஜர் பல்கலைக்கழக தேர்வு முறைகேடு: ஆட்சிக்குழு விசாரணை

மதுரை: தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் கேரள மையங்களில் அண்மையில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தலைமையில் இன்று விசாரணை தொடங்கியது.

mdu
mdu
author img

By

Published : Aug 22, 2020, 10:52 AM IST

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் கேரள மையங்களில் பயின்ற மாணவர்கள் வீட்டிலிருந்து தேர்வு எழுதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அண்மையில் புகார் எழுந்தது. முறைகேட்டில் பல்கலைக்கழக அலுவலர்களும், ஊழியர்களும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து கேரள மையங்களில் நடைபெற்ற முறைகேடு அண்மையில் பல்கலைக்கழகத்தில் மறுமதிப்பீடு நடைபெற்றபோது கூடுதல் மதிப்பெண்கள் போடப்பட்டதாக பெண் விரிவுரையாளர் மீது எழுந்த புகார் ஆகியவை பற்றி விசாரிக்க ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தலைமையில் இன்று விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து விசாரணைக்குழு பல்கலைக்கழகத்தில் இன்று கூடியது பல்கலைக்கழக பதிவாளர் வி.எஸ். வசந்தா, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தீனதயாளன், பாரிபரமேஸ்வரன், ஷகிலா ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் மறுமதிப்பீட்டு முறைகேடு தொடர்பாகப் பெண் விரிவுரையாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து கேரள மையங்களில் நடைபெற்ற தேர்வு முறைகேடு தொடர்பாக பல்கலைக்கழக ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் தேர்வுத் துறையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் விசாரணைக்கு முன்னிலையாகினர்.

இது தொடர்பாக பல்கலைக்கழக அதிகாரிகள் கூறும்போது, தற்போது நடைபெற்றுள்ள விசாரணையின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆட்சிக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

இதையும் படிங்க: காமராஜர் பல்கலைக்கழகத்தில் விநாயகர் சிலை: எதிர்ப்புக்கு பின் அகற்றம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.