மக்கள் நீதி மய்ய நிறுவனரும் நடிகருமான கமல்ஹாசனின் 66ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை நகர் முழுவதும் அவரது ரசிகர்கள் சுவரொட்டி ஒட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், மதுரை மத்திய தொகுதியில் 'வெற்றி வேட்பாளரே வணங்குகிறோம்' என்ற வாசகங்கள் இடம் பெற்ற சுவரொட்டிகள் தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. மதுரை மத்திய தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக தற்போது திமுகவைச் சேர்ந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உள்ளார். இந்தச் சூழலில் கமல்ஹாசன் மதுரையில் போட்டியிட இருப்பதாக இடம் பெற்றுள்ள வாசகங்கள் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பையும், பிற கட்சி பிரமுகர்கள் மத்தியில் கடுமையான கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சுவரொட்டிகள் அவரது அனுமதி பெற்று தான் ஒட்டப்பட்டதா? அல்லது கட்சி நிர்வாகிகள் ஆர்வ மிகுதியினால் இதுபோன்ற சுவரொட்டிகளை ஒட்டினார்களா? என அப்பகுதிவாசிகள் கேள்வியெழுப்பிவருகின்றனர்.