ETV Bharat / state

கமலுக்கு முன் ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை - அரவக்குறிச்சி

அரவக்குறிச்சி தேர்தல் பரப்புரையின்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று பேசியதன் அடிப்படையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் மீது தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
author img

By

Published : May 20, 2019, 12:26 PM IST

அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் பரப்புரையின் போது நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன், 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் நாதுராம் கோட்சே என்று பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்தது, பல்வேறு ஊர்களிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்து முன்னணி சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது.

அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரத்தின் போது மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலைத் தூண்டும் வகையில் பேசுதல் என இரண்டு பிரிவுகளில் கமல் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும், இதனை அவசர வழக்காக விசாரிக்கக் கோரியும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், கமல் ஹாசன் சார்பில் முறையிடப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணைக்குத் தடை கோரும் மனுக்களை விடுமுறைக் கால அமர்வில் விசாரிக்க இயலாது என்றும், வேண்டுமென்றால், மனுதாரர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தால் அதனை பரிசீலிப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, கமல் ஹாசன் தரப்பில் முன் ஜாமீன் கோரி கடந்த வாரம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதியால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இதில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் கமலுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 15 நாட்களுக்குள் கமல் ஹாசன் அரவக்குறிச்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 2இல் பிணைத் தொகை செலுத்தி முன் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.