கீழடி நான்கு, ஐந்தாம் கட்ட அகழாய்வில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், சூது பவள மணிகள் , விளையாட்டுப் பொருட்கள், உறை கிணறுகள், செங்கல் கட்டுமானங்கள், மிகச் சிறந்த நீர் நிர்வாகத்திற்கான வடிகால் அமைப்புகள் போன்றவை கிடைத்தன.
இவை மதுரை உலக தமிழ் சங்கத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கீழடி அகழாய்வு கண்காட்சியினை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி வைத்தியநாதன் பார்வையிட்டு தொல்லியல் துறை அலுவலர்களிடம் பழங்கால பொருட்கள் குறித்து ஆர்வமுடன் விரிவாக கேட்டறிந்தார்.
இதேபோல் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட (VIRTUAL REALITY ) மெய்நிகர் அறைக்கும் சென்று பார்வையிட்டார்.
இதையும் படிங்க: கீழடி அகழாய்வு கண்காட்சியை வரவேற்றுள்ள சீமான்!