மதுரை அருகே உள்ள தெற்கு வாசல் சின்னக்கடை தெரு பகுதியைச் சேர்ந்தவர் சலாம். இவர் அதே பகுதியில் நகை பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த அஸ்ஸாம் ஷேக் என்பவர் பழைய தங்கத்தை விற்பனை செய்துவிட்டு புதிய தங்கம் வாங்குவது போல் நகை பட்டறைக்கு வந்துள்ளார்.
அப்போது, அஸ்ஸாம் ஷேக் கொண்டு வந்த தங்க நகையை சோதனை செய்து கொண்டிருக்கும்போது கல்லாவில் வைத்திருந்த 147 சவரன் தங்க நகையை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நகை பட்டறை உரிமையாளர் சலாம் தெற்குவாசல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: