ETV Bharat / state

அமெரிக்காவைக் கலக்கும் இருளர்கள் - ஆச்சரியமளிக்கும் இரட்டையர்

நடிகர் சூர்யா நடித்த 'ஜெய் பீம்' படம் வெளியாகி இருளர் பழங்குடியினரின் வாழ்வியல் அவலத்தை வெளிக்காட்டியுள்ளது. இந்தச் சூழலில், அச்சமூகத்தைச் சேர்ந்த மாசி சடையனும், வடிவேல் கோபாலும் அமெரிக்க நாட்டையே அதிரச் செய்திருக்கிறார்கள் என்பது வியப்பிற்குரியது.

இருளர்கள்
இருளர்கள்
author img

By

Published : Nov 5, 2021, 3:34 PM IST

Updated : Nov 5, 2021, 6:55 PM IST

மதுரை: அமெரிக்க நாடு 50 மாகாணங்களைக் கொண்ட மிகப்பெரும் நிலப்பரப்பைக் கொண்ட நாடாகும். அதன் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவும் சூழலில், கடைக்கோடி மாகாணமான ஃபுளோரிடா தமிழ்நாட்டைப் போன்ற தட்பவெப்பத்தைக் கொண்ட பகுதியாகும்.

இங்கு பல ஹெக்டேர் கணக்கில் சதுப்பு நிலக்காடு ஒன்று உள்ளது.

அமெரிக்காவைக் கலக்கும் இருளர்கள்

அக்குறிப்பிட்ட சதுப்பு நிலக்காடு பல்வேறு ஓடைகளும், நீர் நிலைகளும் நிறைந்த பகுதியென்பதால், கானுயிர்களின் ஆதிக்கமும் அதிகம். முதலைகள் செழித்து வாழ்கின்றன. மான்கள், முயல்கள், காட்டெலிகள் என உயிரினக்கோளமாக அச்சதுப்பு நிலக்காடு திகழ்கிறது.

'ஜெய் பீம்' இருளர்கள்
'ஜெய் பீம்' இருளர்கள்

சதுப்பு நிலக்காடு

பொதுவாகவே, அமெரிக்கர்கள் கானுயிர்களை வீட்டில் வைத்து வளர்ப்பதில் அலாதி விருப்பம் கொண்டவர்கள். அப்படி அவர்கள் வளர்த்த ஊர்வன விலங்குகளில் ஒன்றுதான், பர்மிய மலைப்பாம்பு இனம். குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு தாங்கள் வளர்த்த பாம்புகளை ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள அச்சதுப்பு நிலக் காட்டிற்குள் விட்டுவிடுவது வழக்கம்.

இந்நிலையில், அக்குறிப்பிட்ட காட்டின் உயிரினச்சங்கிலியில் பெரும் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 1993-1999ஆம் ஆண்டுகளில் அப்பகுதியில் நடத்தப்பட்ட வனஉயிரினக் கணக்கெடுப்பில் இருந்த விலங்குகள், உயிரினங்கள் 2003-2011இல் மிகப்பெருமளவு குறைந்துபோனது கண்டறியப்பட்டது. இதற்குக் காரணம் அமெரிக்கர்களால் கொண்டு வந்து விடப்பட்ட பர்மிய மலைப்பாம்பு இனங்கள்தான் எனத் தெரியவந்தது.

'ஜெய் பீம்' இருளர்கள்
'ஜெய் பீம்' இருளர்கள்

மலைப்பாம்பு இனம் அதிகரிப்பு

ஆகையால், இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வர ஃபுளோரிடா மாகாண அரசு முயன்றது. தங்கள் மண் சார்ந்த விலங்கினங்களைக் காப்பாற்றுவதற்காக, இந்தப் பாம்புகளைக் கட்டுக்குள் கொண்டு வர. பாம்பு பிடிக்கும் வல்லுநர்கள் பிடிக்கும் ஒவ்வொரு பாம்புக்கும் தொகை நிர்ணயம் செய்தது.

இதன் காரணமாக அமெரிக்கா நாட்டிலுள்ள பாம்பு பிடிக்கும் வல்லுநர்கள் ஆயிரம் பேர் திரண்டு இந்த முயற்சியில் இறங்கினர். ஒரு மாத காலத்தில் அவர்களால் வேட்டையாடப்பட்ட பாம்புகளின் எண்ணிக்கை வெறும் 106 என்ற நிலையில், உடனடியாக மாற்று முயற்சிகளில் இறங்கினர்.

'ஜெய் பீம்' இருளர்கள்
'ஜெய் பீம்' இருளர்கள்

இருளர் பழங்குடியினர் விரைந்தனர்

அந்த முயற்சியின்போதுதான் உலகத்திலுள்ள பாம்பு பிடி வல்லுநர்கள் குறித்த ஆய்வினை ஃபுளோரிடா மாகாணம் மேற்கொண்டது. அதில் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் வாழும் இருளர் பழங்குடியினரை அறிந்து அவர்களை அணுகியது. கடந்த 2016ஆம் ஆண்டு அவர்களில் மாசி சடையன், வடிவேல் கோபால் என்ற இருவரை ஃபுளோரிடாவுக்கு அழைத்துச் சென்றது.

மேற்கண்ட இருவரும் இணைந்து வெறும் ஒரு மாதத்தில் 27 பாம்புகளை வேட்டையாடினர். இந்த நிகழ்வு அமெரிக்க நாட்டையே அதிரச் செய்தது. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு மாதத்தில் 106 பாம்புகளை மட்டும் பிடித்த நேரத்தில், இவர்களின் சாதனை மிக அளப்பரியதாகக் கருதப்பட்டது.

'ஜெய் பீம்' இருளர்கள்
'ஜெய் பீம்' இருளர்கள்

பாம்புகளை வேட்டையாடினர்

அதற்குப் பிறகு தொடர்ந்து அப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட அவ்விருவரின் அறிவை, தாங்கள் கற்றுக் கொள்ளும் விதமாக ஃபுளோரிடா மாகாணப் பல்கலைக்கழகத்தில் மாசி மற்றும் வடிவேல் ஆகிய இருவரோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது அவ்விரு பழங்குடியினத்தவரும் ஃபுளோரிடா மாகாணத்தில் பிற பாம்பு பிடி வல்லுநர்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரான ரோமுலஸ் வைட்டேகர் கூறுகையில், 'உலகின் ஆகச்சிறந்த பாம்பு பிடி வல்லுநர்கள் என்று மாசி சடையனையும், வடிவேல் கோபாலையும்தான் நான் சொல்வேன்.

அவர்கள் இருவரும் பாம்புகளைப் பிடிக்கும் உத்தி மிக நேர்த்தியானது. அலாதியானது. நாம் அறிந்து கொள்ள முயற்சிக்கும் முன்பே அவர்கள் பிடித்துக் கொண்டு வந்துவிடுகிறார்கள். தொல் பழங்குடியின மக்களின் மரபு சார்ந்த அறிவு இது' என்கிறார்.

'ஜெய் பீம்' இருளர்கள்
'ஜெய் பீம்' இருளர்கள்

அமெரிக்கர்களுக்கு அனுபவங்களைப் பகிர்கின்றனர்

இதுகுறித்து அமெரிக்க வாழ் தமிழர் அர்ஜூன் கூறுகையில், 'காலங்காலமாக நம்மால் ஒடுக்கப்பட்ட தொல் பழங்குடி மக்களின் அறிவை அமெரிக்கா வியக்கிறது.

அவர்கள் மீது படு மோசமான வழக்குகளைப் போட்டு மிக மோசமான அவலவாழ்வைத் தருகிறோம். வளர்ந்த நாடான அமெரிக்காவின் சிந்தனையும், தமிழ்நாட்டின் சிந்தனையும் எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம்' என்கிறார்.

இதையும் படிங்க: “முதலமைச்சர் வழங்கியிருப்பது பட்டா அல்ல, நம்பிக்கை” - நடிகர் சூர்யா

Last Updated : Nov 5, 2021, 6:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.