ETV Bharat / state

கிறிஸ்துமஸ்: மதுரை மல்லிகையின் விலை ரூ.2,500

author img

By

Published : Dec 24, 2022, 1:36 PM IST

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு மதுரை மல்லிகை கிலோ ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை : மதுரை மல்லிகையின் விலை ரூ.2,500!

மதுரை: மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம். மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் தேனி மாவட்டங்களில் இருந்தும் இங்கு பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

நாளொன்றுக்கு சராசரியாக 50 டன்னுக்கு மேல் இங்கு பூக்கள் விற்பனையாகிறது. மதுரையின் தனிச்சிறப்பாகவும், மிக்க அடையாளமாகவும் மத்திய அரசின் புவி சார் குறியீடு அந்தஸ்தையும் பெற்றுள்ள மதுரை மல்லியின் தரம், மணம் காரணமாக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மதுரை மல்லி இன்று (டிசம்பர் 24) கிலோ ரூ.2,500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று முல்லை ரூ.1,200, பிச்சி ரூ.1,200, சம்பங்கி ரூ.200, கனகாம்பரம் ரூ.1,000, அரளி ரூ.200 என விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து மாட்டுத்தாவணி மொத்த பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி மதுரை மல்லிகையின் விலை கூடுதலாக காணப்படுகிறது. அதே நேரம் பிற பூக்களின் விலை சற்று குறைந்து உள்ளது. இந்த விலை நிலவரம் அடுத்த ஒரு நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

இதையும் படிங்க: மத்தியப் பிரதேசத்தில் ஒரு அத்திப்பட்டி கிராமம் "உதய்புரா"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.