மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா குழுவில் தங்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி பட்டியலின மக்கள் மனு அளித்தனர்.
இது குறித்து விசிக மாநில அமைப்புச் செயலாளர் எல்லாளன் கூறுகையில், "வரும் ஜனவரி 16ஆம் தேதி மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது.
அப்போட்டியை பாலமேடு கிராமத்தின் மடத்துக் கமிட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்திவருகிறது. பாலமேடு கிராமத்திலுள்ள அனைத்து சமுதாயத்தினரையும் இணைத்து குழு அமைத்து நடத்தப்பட்டுவரும் இப்போட்டியில் காலங்காலமாக அதே கிராமத்தில் வாழும் பட்டியலின மக்கள் தவிர்க்கப்பட்டுள்ளனர்.
எனவே மடத்து கமிட்டியில் பட்டியலின மக்களையும் இணைத்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தமிழ்நாடு அரசு முன்னின்று இந்த ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ஈரோடு ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள்: அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு!