இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ' மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் கிராமங்களில் ஜல்லிக்கட்டு விழா தொடர்பாக எந்தவொரு தனிநபரிடமோ, விழாக்குழுவினரிடமோ நன்கொடை மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் மேற்கண்ட கிராமங்களில் ஜல்லிக்கட்டு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது. எனவே ஜல்லிக்கட்டு விழா தொடர்பாக நன்கொடை செலுத்த விரும்புபவர்கள் தல்லாகுளம் கிளை கனரா வங்கிக் கணக்கு எண் 1012101049222 (IFSC Code No.CNRB0001012) (MICR Code No.625015008) என்ற மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரின் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.
தங்களது பரிசுப்பொருட்களை அளிக்க விரும்புபவர்கள் அவனியாபுரம் கிராமத்திற்கு ஜல்லிக்கட்டு அலுவல் குழுத் தலைவரான மேலூர் வருவாய் கோட்டாட்சியரிடமும், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய கிராமங்களுக்கு ஜல்லிக்கட்டு அலுவல் குழுத் தலைவரான மதுரை வருவாய் கோட்டாட்சியரிடமும் சமர்ப்பிக்க வேண்டுமென' மாவட்ட ஆட்சியர் வினய் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:
'தமிழரின் பொங்கல் கலாசாரம் பெருமை மிக்கது' - வியக்கும் சீன மாணவிகள்