ETV Bharat / state

அரசியலும், ஆன்மிகமும் பிரிந்திருப்பது நல்லது- பழனிவேல் தியாகராஜன்

அரசியலும் ஆன்மிகமும் பிரிந்திருப்பது ஜனநாயகத்திற்கு நல்லது என தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

it-is-good-for-democracy-that-politics-and-spirituality-are-separated-says-finance-minister-ptr
அரசியலும், ஆன்மீகமும் பிரிந்து இருப்பது நல்லது- நிதியமைச்சர்
author img

By

Published : Aug 14, 2021, 4:42 PM IST

மதுரை: மதுரை ஆதீனத்தின் 292ஆவது ஆதீனமாக அருணகிரிநாதர் இருந்துவந்தார். உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரின் உடலுக்கு தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தியும் அஞ்சலி செலுத்தினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பழனிவேல் தியாகராஜன், "முதலமைச்சர் அறிவுறுத்தியதன் பேரில் மதுரை ஆதீன மடத்திற்கு வந்து அருணகிரிநாதருக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தியுள்ளோம்.

அரசியலும், ஆன்மிகமும் பிரிந்து இருப்பது நல்லது- நிதியமைச்சர்

292ஆவது ஆதீனம் என் மீது மிகுந்த பாசம் கொண்டவர் என்பதால் இவரின் மறைவு தனிப்பட்ட விதத்தில் எனக்கு பெரும் இழப்புதான். பண்பாட்டு, கலாசார அடையாளமாகவும் சுயமரியாதையையும் ஊக்குவிக்கும் கட்சியாகவும் திமுக இருந்து வருகிறது.. தொடர்ந்து இருக்கும்" என்றார்.

finance minister ptr
மதுரை ஆதினத்திற்கு அஞ்சலி செலுத்திய நிதியமைச்சர்
மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுமா என்பது குறித்த கேள்விக்கு, "பொதுவாக ஜனநாயக நாட்டில் அரசியலும், ஆன்மிகமும் இணைந்து இருத்தல் மரபு அல்ல. ஆன்மிகத்தின் செயல்பாடு என்பது வேறு, அரசியல் செயல்பாடு என்பது வேறு இரண்டும் தனித்தனியாக இருப்பதுதான் சமுதாயத்திற்கு நல்லது. மற்ற முடிவுகளை முதலமைச்சர் எடுப்பார்" எனப் பதிலளித்தார்.

இதையும் படிங்க: மதுரை ஆதீனம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.