ETV Bharat / state

காவலர்கள் போராட முடியாது என்பதால் இந்த காலதாமதமா? அரசை எச்சரித்த நீதிபதிகள் - Low paid police

மற்ற துறையைச் சார்ந்தவர்கள் போராட்டங்கள் நடத்தி தங்களது பிரச்னைக்கு தீர்வு காண்கின்றனர். ஆனால், காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் காலதாமதம் செய்யலாமா என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Is this a delay because the police cant fight: madurai high court bench warned state govt

author img

By

Published : Dec 17, 2020, 3:11 PM IST

மதுரை: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் மாசிலாமணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு காவல் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாகவும், ஊதிய உயர்வு செய்து தர கோரியும் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரிபவர்கள் மழை, வெள்ளம், வெயில், போன்ற அனைத்து காலங்களிலும் 24 மணி நேரமும் பணியாற்றுகின்றனர். குறிப்பாக விஐபிகள் வரும் காலங்களிலும் சாலை ஓரங்களில் நின்றும் பொதுமக்களைப் பாதுகாக்கும் பணி செய்துவருகின்றனர்.

குறைவான ஊதியம் பெறும் காவலர்கள்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1000 பேருக்கு 2 பேர் என்ற விகிதத்தில் மட்டுமே காவல் துறையினர் உள்ளனர். அவர்கள் குறைந்த ஊதியத்திலும் பணிபுரிந்துவருகின்றனர். மத்தியப் பிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிளுக்கு 38 ஆயிரம் ரூபாய்வரை ஊதியம் வழங்கப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் 40 ஆயிரம் வரையிலும், மேற்கு வங்கத்தில் 28 ஆயிரத்து 500 ரூபாய், மகாராஷ்டிராவில் 29 ஆயிரத்திலிருந்து 34 ஆயிரம் ரூபாய்வரை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மழை, வெயில் பாராமல் பணிபுரியும் காவலர்களுக்கு வெறும் 18 முதல் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் காவலர்களாக நியமிக்கப்படும் 90 விழுக்காட்டினர், அவர்களது வீட்டிலிருந்தும், சொந்த ஊர்களிலிருந்தும் வெகு தொலைவிலேயே பணியமர்த்தப்படுகின்றனர். எனவே, அவர்களுக்கு வழங்கப்படும் இந்த மிகக்குறைந்த ஊதியம், அவர்களது வாழ்க்கை நடத்துவதற்கு போதிய அளவில் இல்லாமல் உள்ளது. 24 மணி நேரமும் பணியில் ஈடுபடும் தமிழ்நாடு காவலர்களின் ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும். அதேபோல் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

காவல் துறையினர் சந்திக்கும் பிரச்னை என்ன?

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் காவல் துறையினர் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? காவல் துறையினருக்குச் சரியான நேரங்களில் பதவி உயர்வு வழங்கப்படுகிறதா?

காவல் துறையில் எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளன? காவல் துறையினருக்குத் தமிழ்நாட்டில் வழங்கப்படும் ஊதியம் மற்றும் மற்ற மாநிலங்களில் வழங்கப்படும் ஊதியம் குறித்த தகவல் காவல் துறையினருக்கு என சிறப்பு காப்பீடு செய்யப்பட்டுள்ளதா? 2013ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின்படி காவல் துறையினருக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதா, அமைக்கப்படவில்லை என்றால் எப்போது அமைக்கப்படும்? தமிழ்நாட்டில் எத்தனை காவல் துறையினர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் போன்ற கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது.

அரசை எச்சரித்த நீதிபதிகள்

அதற்கு பதலளித்த நீதிபதிகள், "காவலர்களுக்கு என்ன பிரச்னை? என்ற கேள்விக்கு பதில் அளிப்பதில் என்ன பிரச்னை? மற்ற துறையைச் சார்ந்தவர்கள் போராட்டங்கள் நடத்தி தங்களது பிரச்சினைக்கு தீர்வு காண்கின்றனர். காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் காலதாமதம் செய்யலாமா? என கேள்வி எழுப்பினர். மேலும், நாளை பிற்பகலுக்குள்ளாக பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் தமிழ்நாடு உள்துறைச் செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் காணொலி வாயிலாக ஆஜராக நேரிடும் என எச்சரித்து வழக்கை நாளைக்கு ஒத்திவைத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.