ETV Bharat / state

மதுரையில் சர்வதேச சதுரங்கப்போட்டி - 23 நாடுகள் பங்கேற்பு! - மதுரை

மதுரை: மதுரையில் நடைபெற்றுவரும் சர்வதேச அளவிலான சதுரங்கப்போட்டியில் இந்தியா உட்பட 23 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

சதுரங்கப்போட்டி
author img

By

Published : Aug 12, 2019, 8:32 AM IST

மதுரையில் சர்வதேச அளவிலான சதுரங்கப்போட்டி நேற்று தொடங்கியது. இதில், இந்தியா உட்பட 23 நாடுகளிலிருந்து வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாதம் 18ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன. மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள ஒரு தனியார் விடுதியில் ஆனந்தி செஸ் அகாதெமி, தமிழ்நாடு மாநில செஸ் அசோசியேஷன் ஆகியவை இணைந்து சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டியை நடத்துகின்றன.

மதுரையில் சர்வதேச சதுரங்கப்போட்டி - 23 நாடுகள் பங்கேற்பு!

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போட்டியின் இயக்குநர் பிரகதிஷ், "இந்தப் போட்டியில் வெற்றிபெறுபவர்களின் மொத்தப் பரிசின் மதிப்பு ரூ.32 லட்சமாகும். போட்டியாளர்களுக்கு உணவு, தங்குமிடம், போக்குவரத்து உள்பட அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து தரப்பட்டுள்ளன" என்றார்.

Intro:மதுரையில் சர்வதேச சதுரங்கப்போட்டி - 23 நாடுகள் பங்கேற்பு

மதுரையில் சர்வதேச அளவிலான சதுரங்கப்போட்டி இன்று தொடங்கியது. இதில் இந்தியா உட்பட 23 நாடுகளிலிருந்து வீரர்கள் பங்கேற்கின்றனர். வருகின்ற 18-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.
Body:மதுரையில் சர்வதேச சதுரங்கப்போட்டி - 23 நாடுகள் பங்கேற்பு

மதுரையில் சர்வதேச அளவிலான சதுரங்கப்போட்டி இன்று தொடங்கியது. இதில் இந்தியா உட்பட 23 நாடுகளிலிருந்து வீரர்கள் பங்கேற்கின்றனர். வருகின்ற 18-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.

மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள ஒரு தனியார் விடுதியில் ஆனந்தி செஸ் அகாடமி மற்றும் தமிழ்நாடு மாநில செஸ் அசோசியேசன் ஆகியவை இணைந்து சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டியை நடத்துகின்றன. இப்போட்டியை சதுரங்க விளையாட்டு அமைப்பின் தலைவர் அனந்தராமன் தலைமையில் தமிழ்நாடு மாநில செஸ் அசோசியேசன் பொதுச்செயலாளர் ஸ்டீபன் பால்சாமி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

இதில் இந்தியா உட்பட நேபாளம், பங்களாதேஷ், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் உட்பட 23 நாடுகளில் இருந்து மாற்றுத் திறனாளிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர். போட்டிகள் இம்மாதம் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போட்டியின் இயக்குநர் பிரகதிஷ் கூறுகையில், இந்த ஆண்டு சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டியில் ஆனந்தி செஸ் அகடெமி மற்றும் தமிழ்நாடு மாநில செஸ் அசோசியேசன் உடன் இணைந்து நடத்துகின்றோம். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் நபர்கள் பெறும் மொத்தப் பரிசின் மதிப்பு ரூ.32 லட்சமாகும்.

போட்டியாளர்களுக்கு உணவு தங்குமிடம் போக்குவரத்து உட்பட அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து உள்ளோம் போட்டியானது வரும் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று கூறினார்.
Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.