ETV Bharat / state

பருப்பு, சமையல் எண்ணெய் கொள்முதல் டெண்டருக்கு இடைக்காலத் தடை - pulses

மதுரை: பொது விநியோகத் திட்டத்திற்காக பருப்பு, சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பருப்பு, சமையல் எண்ணெய் கொள்முதல் டெண்டருக்கு இடைக்காலத் தடை

author img

By

Published : May 26, 2021, 10:51 PM IST

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றுத் தாக்கல் செய்தார். அதில், "தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிபக் கழகம் சார்பாக இரண்டு கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பாக வழங்கி வரும் அத்தியாவசியப் பொருள்களுக்கான ஏலத்தில் கலந்து கொள்ளும் நிறுவனங்களுக்கு திறன், உள்கட்டமைப்பு, அனுபவம், ஆண்டு வருமானம் ஆகியவை அடிப்படையாக உள்ளது.

இதன்படி 2021 பிப்ரவரி 25ஆம் தேதி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இயக்குநர் குழு சார்பாக கூட்டம் நடைபெற்றது, இந்த ஏலத்தில் கலந்து கொள்வதற்கு முந்தைய நிபந்தனைகள் கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது 2021 ஏப்ரல் 26ஆம் தேதி 20,000 மெட்ரிக் டன் பருப்பு கொள்முதலுக்கான ஏல அறிவிப்பையும், 2021 மே 5ஆம் தேதி 80 லட்சம் லிட்டர் பாமாயில்கான அறிவிப்பும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வெளியிட்டுள்ளது. இதில், முந்தைய நிபந்தனைகளைப் பின்பற்றாமல், புதிய நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஏலத்தில் கலந்து கொள்ளும் நிறுவனம் முந்தைய நிபந்தனைகள் படி கடைசி மூன்று ஆண்டுகளில் ஆண்டு வருமானம் 71 கோடியாக இருக்கவேண்டும். ஆனால், தற்போது வெளியாகியுள்ள நிபந்தனையில் கடைசி மூன்று ஆண்டுகளில் 11 கோடி ஆண்டு வருமானம் இருந்தால் போதும் என்று உள்ளது. மேலும், டெண்டர் அறிவிப்பாணையில் 14 விதிமுறைகள் உள்ளன, அதனை முறையாகக் பின்பற்றவில்லை.

அதேபோல, ஏலம் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் இருந்தால் 30 நாட்கள் கால அவகாசம் கொடுக்க வேண்டும், ஆனால் இந்த டெண்டரில் அவசர அவசரமாக ஆறு நாட்களுக்குள் முடிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பாக 20,000 மெட்ரிக் டன் பருப்பு , 80 லட்சம் லிட்டர் பாமாயில்கான டெண்டர் அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். மேலும் 2021 ஏப்ரல் 26 ஆம் தேதி மற்றும் 2021 மே 5ஆம் தேதி பாமாயில்காக வெளியிடப்பட்ட அறிவிப்பையும் ரத்து செய்து முந்தைய நிபந்தனைகளின் படி புதிய அறிவிப்பு வெளியிட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி வேலுமணி முன் இன்று விசாரணைக்கு வந்தது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரசு தற்போது வெளியிட்டுள்ள பாமாயில், பருப்பு வகைகளுக்கான டெண்டரில் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. எனவே, இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என முறையிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வீரா கதிரவன் கூறுகையில், இரண்டு கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியமான பொருட்களைக் கொடுப்பதற்காக அரசு சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் பல்வேறு மாற்றங்களையும் அரசு செய்துள்ளது. குறிப்பாக இந்த கரோனா தொற்று காலத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக அவசரகால டெண்டர் விடப்பட்டது. அதனால் இதற்குத் தடை விதிக்க கூடாது என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதுவரையில் இந்த டெண்டருக்கு இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: விரைவில் தடுப்பூசி: உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரிய தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.