ETV Bharat / state

அனுமதி பெறாமல் ஆலை நடத்துபவர்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம் என்னும் அறிவிப்பாணைக்கு இடைக்காலத்தடை - புதிய அறிவிப்பாணையில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்

சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் ஆலை நடத்துபவர்கள் விண்ணப்பித்து அனுமதி பெற வழிவகை செய்யும் மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அனுமதி பெறாமல் ஆலை நடத்துபவர்கள் அதற்காக விண்ணப்பிக்கலாம் என்னும் அறிவிப்புக்கு இடைக்காலத்தடை

author img

By

Published : Jul 15, 2021, 3:42 PM IST

மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் உரிய அனுமதி பெறாமல் தொழிற்சாலைகள் ஆரம்பித்து செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் ஜூலை 7ஆம் தேதி வெளியிட்ட புதிய அறிவிப்பாணையின்படி,

சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பித்து, அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமா, உயர் நீதி மன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
'தொழிற்சாலைகள் தொடங்கும்முன் மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெற வேண்டும். மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறாத தொழிற்சாலைகள் மூடப்படும்.
ஆனால், தற்போது மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை கடந்த 7ஆம் தேதி ஒரு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.
அறிவிப்பாணை கூறுவது என்ன? இந்த அறிவிப்பாணையில், மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் உரிய அனுமதி பெறாமல் தொழிற்சாலைகள் ஆரம்பித்து செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் தற்போது இந்த புதிய அறிவிப்பாணையின்படி, தற்போது சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பாணை வெளியிடப்பட்டு உள்ளது.

புதிய அறிவிப்பாணையில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்
இது இயற்கை நீதிக்கு எதிரானது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் உரிய அனுமதி பெறாமல் தொழிற்சாலைகள் ஆரம்பித்து செயல்பட்டுக்கொண்டிருந்தாலும் ஜூலை 7ஆம் தேதி வெளியிட்ட புதிய அறிவிப்பாணையின்படி சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்னும் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்' என மனுவில் கூறி உள்ளார் .
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஜூலை 7ஆம் தேதி வெளியிட்ட புதிய அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும் இது குறித்து, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ஒரு வாளியுடன் சென்று நீதிமன்றத்தை தூய்மைப்படுத்த உள்ளேன் - தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.