மதுரை: திருப்பரங்குன்றம், வலையங்குளம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், சரசுவதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத் துறை உதவி பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் முனீஸ்வரன் தலைமையிலான மாணவர்கள் இந்த கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கிராமத்தின் கண்மாய் கரை அருகே உள்ள விநாயகர் கோயில் முன்பு திருமலை மெச்சினார் என்ற பெயரை பறைச்சாற்றும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இதனை சோதனை செய்த முனீஸ்வரன், இந்த கல்வெட்டு 312 ஆண்டுக்கு முன்பு வெட்டப்பட்டது என்றும் திருமலை நாயக்கர் காலத்தை உடையது என்றும் கூறுகிறார்.
இது குறித்து முனீஸ்வரன் கூறியதாவது, இக்கல்வெட்டு மூலம் திருமலை மெச்சினார் வம்சம் வலையங்குளம் விநாயகர் கோயிலுக்கு திருப்பணிகள் செய்ததை குறிப்பிட்டு வெட்டப்பட்டது. பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாலாற்றில் பழமையான 3 கற்சிலைகள் மீட்பு !