ETV Bharat / state

"ஆவினுக்கும், தனியார் பால் நிறுவனங்களுக்கும் மறைமுக தொடர்பு" - அண்ணாமலை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2023, 4:37 PM IST

Indirect Link between Aavin and Private Dairy Companies: ஆவின் நிறுவனத்திற்கும், தனியார் பால் நிறுவனங்களுக்கும் இடையே மறைமுக தொடர்பு உள்ளதாகவும், ஆவின் பால் பாக்கெட் ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.12 வரை கொள்ளை அடிக்கப்படுவதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Indirect link between Aavin and private dairy companies Annamalai Accuses
ஆவின் நிறுவனத்துக்கும் தனியார் பால் நிறுவனங்களுக்கும் இடையே மறைமுக தொடர்பு இருப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டு

மதுரை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை "யங் இந்தியன்" என்ற அமைப்பின் சார்பில் இன்று (நவ. 25) மதுரையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "திமுக கட்சியில் கோழைகள் மட்டுமே உள்ளனர். பிரதமர் குறித்த ட்வீட்டை அழித்து விட்டு ஓடியவர் தான் மனோ தங்கராஜ்.

தமிழ்நாட்டு அரசியலில், அடிப்படையில் ஒரு நாகரீகம் தேவை. திமுகவினர் அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். காமராஜரை அவதூறு மூலம் தான் தோற்கடித்தனர். ஒவ்வொரு ஆவின் பால் பாக்கெட்டுக்கும் 10-லிருந்து 12 ரூபாய் வரை கொள்ளை அடிக்கின்றனர். தனியார் பால் நிறுவனங்களுக்கும், ஆவினுக்கும் மறைமுக தொடர்பு உள்ளது.

மனோ தங்கராஜ் அரசியலில் இருப்பது தமிழக மக்களின் சாபக்கேடு. மனோ தங்கராஜ் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அவர் ஐடி துறையில் இருந்த போது அவர் செய்த ஊழலை ஆளுநரிடம் கொடுத்துள்ளோம். நாங்கள் மக்களுக்காக அரசியல் செய்கிறோம். எனவே அது காரசாரமாக தான் இருக்கும்.

மரியாதை கொடுத்தால், நாங்களும் மரியாதை கொடுப்போம். இது பழைய பாஜக அல்ல. நானும் பழைய பாஜககாரன் அல்ல. பொய் சொல்வதில் கில்லாடி அமைச்சர் ரகுபதி. ஆன்லைன் ரம்மி சட்டம் பிழையானது என தெரிந்தும், அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர். பொய்யான மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர்.

துணைவேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் உடனே கையெழுத்து போடவில்லை என்றால், தமிழக அரசு நிர்வாகமே முடங்கி விடுமா? ஆளுநர் கிடப்பில் வைத்திருந்த மசோதாக்களில், எவற்றால் அரசின் நிர்வாகம் முடங்கி விடும் என சொல்லுங்கள். மசோதாவை சரியாக வடிவமைக்க முடியவில்லை.

பெரும்பான்மை இருப்பதால் எந்த மசோதாவை வேண்டுமானாலும் கொண்டு வருவோம் என்றால், அது அனைத்தையும் ஏற்க வேண்டிய அவசியம் ஆளுநருக்கு இல்லை. திமுக பலமுறை ஆட்சியில் இருந்தும், திருடு போன 13 சிலைகளை மட்டுமே மீட்டுள்ளனர். பாஜகவினர் கோயில் சொத்துக்களை ஆக்கிரமித்து உள்ளார்கள் என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்‌. நானே வரவேற்கிறேன்.

3 சதவிகிதம் மட்டுமே பாஜகவினருக்கு சம்பந்தம் உள்ளது. மீதமுள்ள 97 சதவிகித குற்றச்சாட்டும் திமுகவினர் உடையது. முதலமைச்சர் நடைபயிற்சி செல்கையில், ஒரே பிராமண தாத்தா மட்டுமே தினமும் வாழ்த்து சொல்கிறார். பிராமணர் வாழ்த்தை பெற்று ஆட்சியை விளம்பரப்படுத்த முயல்கிறார் முதலமைச்சர்.

ஆயிரம் குடமுழுக்கு நடைபெற்றதற்கும் திமுகவுக்கும் என்ன தொடர்பு? கோயில் உண்டியலில் வரும் பணத்தை வைத்து, அதே கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தி மக்களை முட்டாளாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். கோயில் பணத்தை முழுவதுமாக, அந்த கோயிலை ஒட்டியுள்ள மக்கள் பயன்படும் வகையில் தான் செலவிட வேண்டும்.

கோயில் பணத்தில் அதிகாரிகளுக்கு அலுவலகம், கார் வாங்குவது அறநிலையத்துறை சட்டத்திலேயே கிடையாது. வெற்றி, தோல்வியை சரியாக கையாள நம் நாட்டுக்கு மனப்பக்குவம் வர வேண்டும். கிரிக்கெட்டை வெறும் விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும். பாத யாத்திரை மேற்கொண்ட பிறகு, 6 கிலோ எடை குறைந்துள்ளேன்" என்று அண்ணாமலை கூறினார்.

இதையும் படிங்க: முன்னாள் டிஜிபி மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.