ETV Bharat / state

மின் நிலையங்களுக்கு ரயில் மூலம் நிலக்கரி கொண்டுசெல்வது அதிகரிப்பு - railway

மின்சாரம் தயாரிப்பதற்காக மின் நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்வதற்கான ரயில்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மின் நிலையங்களுக்கு ரயில் மூலம் நிலக்கரி கொண்டுசெல்வது அதிகரிப்பு

author img

By

Published : Jun 3, 2022, 11:11 AM IST

மதுரை: இதுகுறித்து தெற்கு ரயில்வே தரப்பில், "மின் நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க வடமாநிலங்கள் மற்றும் துறைமுகங்களிலிருந்து ரயில் மூலம் நிலக்கரி கொண்டுவரப்படுகிறது. இந்த நிலக்கரி போக்குவரத்து கடந்த மே மாதம் மட்டும் 26 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்தாண்டு மே மாதத்தைக் காட்டிலும் இந்தாண்டு 0.263 மில்லியன் டன்னுக்கும் அதிகமான நிலக்கரி ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் தெற்கு ரயில்வே முதல் முறையாக மே மாதத்தில் மட்டும் 3.621 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது. இதுவும் கடந்தாண்டை காட்டிலும் 49 சதவீதம் அதிகமாகும்.

இந்த நிதியாண்டில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் தெற்கு ரயில்வே 6.857 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு உள்ளது. கடந்தாண்டு 5.323 மில்லியன் டன் சரக்குகளையே கையாண்ட நிலையில் இந்த ஆண்டு 29 சதவீதத்திற்கும் அதிகமான சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது. இதில் நிலக்கரி, இரும்பு, சிமெண்ட், உணவுப் பொருள்கள், உரம், பெட்ரோலிய பொருள்கள் உள்ளிட்டவை கையாளப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'இந்தியாவில் எங்கு இருந்தாலும் இனி, கோவில்பட்டி கடலை மிட்டாயினை வாங்கலாம்!'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.