ETV Bharat / state

இளைஞனின் உடற்கட்டைத் தீர்மானிப்பதே ஜல்லிக்கட்டு! - Jallikattu

காளையைத் துணிந்து தழுவ அஞ்சுகின்ற ஒருவனை மறுபிறப்பிலும் கூட தொடுவதற்கு அனுமதிக்க மாட்டாளாம் தமிழ் பெண். ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டு அல்ல, இளைஞனின் உடற்கட்டை தீர்மானிக்கும் வாழ்வியல்.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு
author img

By

Published : Jan 12, 2022, 3:56 PM IST

மதுரை : இன்று மிகச் சாதாரணமாக புழக்கச்சொல்லாக மாறிவிட்ட ஜல்லிக்கட்டு, பண்டைய திணை வாழ்க்கை முறையில் அவ்வாறு அழைக்கப்படவில்லை. இவ்விளையாட்டின் உண்மையான பெயர் ஏறுதழுவுதல்.

ஏறு என்றால் காளை என்பது பொருள். இதனையே கலித்தொகை 'கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்' என்று கூறுகிறது.

ஜல்லிக்கட்டு

காளையைத் துணிந்து தழுவ அஞ்சுகின்ற ஒருவனை மறுபிறப்பிலும் கூட தொடுவதற்கு அனுமதிக்க மாட்டாளாம் இடைக்குலப் பெண் என்பது இதன் பொருள்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை திணை வாழ்வியல் பகுதிகளாக தான் வாழ்ந்த நிலத்தைப் பண்டைய தமிழர்கள் பிரித்து வைத்திருந்தனர். இயல்பாகவே முல்லை நில மக்களுக்கு உற்ற தோழனாகத் திகழ்ந்தது மாடு.

இலக்கியங்களில் வரலாறு

இயற்கையை நேசித்தும் அதோடு இயைந்தும் வாழ்ந்த பண்டைய மக்கள், தங்களின் உயிர் வாழ்க்கைக்கு உற்ற துணையாக விளங்குகின்ற மாடுகளையும் உடன் பிறந்த ஒன்றாகவே வளர்த்து மகிழ்ந்தார்கள். பண்டைய தமிழ் இலக்கியங்களில் இதனை மெய்ப்பிக்கும் பாடல்கள் நிறையவே உள்ளன.

திமில் பெருத்த, தொடைகள் தடித்த, கூர்த்த கொம்புடைய காளையை சிங்கம், புலி, சிறுத்தை போன்ற கொல் விலங்குகளும்கூட அணுகுவதற்கு அஞ்சும். அடர்ந்த காட்டு நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள், இது போன்ற கொல் விலங்குகளை அடக்குவதற்கான பயிற்சியில் தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள காளையிடமே பாடம் கற்றனர்.

ஏறு தழுவுதல் வாழ்வியல்

அந்தப் பண்பாட்டின் தொடர்ச்சியாகவும், காளையை தனது நண்பனாகக் கொண்டு அதோடு விளையாடி மகிழ்வதற்கான கொண்டாட்டமாகவும் நாளடைவில் ஏறுதழுவுதல் பெரு நிகழ்வாக மாறியிருக்கிறது.

ஜல்லிக்கட்டு விளையாட்டின் மையப்புள்ளியாக மதுரை இருப்பதற்குக் காரணம், இந்த நிலப்பகுதி இயல்பாகவே காடும் காடு சார்ந்த இடமாகும். ஆகையால் இங்கு வாழ்ந்த பண்டைக்கால முல்லை நில மாந்தர் ஏறுதழுவுதலை தங்களின் வாழ்வியல் கூறாக ஆக்கிக் கொண்டனர்.

ஜல்லிக்கட்டு, சல்லிக்கட்டு எது சரி

கழனியில் கதிர்கள் முற்றி விளைந்து செழித்து நிற்கும் தை மாதத்தின் பிறப்பை, வருடப் பிறப்பாகவும் உழவருக்கு நன்றி செலுத்தும் முகத்தான் பொங்கல் திருநாளை அறுவடை பெருநாளாகவும் அதற்கு அடுத்த நாளை உழவனின் நண்பனாகத் திகழ்ந்த மாடுகளுக்கு நன்றி பாராட்டும் நாளாகவும் மாற்றியிருக்கின்றனர்.

உண்மையான பொருள் விளக்கப்படி பார்த்தால் ஜல்லிக்கட்டு என்பது தவறு. சல்லிக்கட்டு என்பதுதான் சரி. தன்னிடம் பணமில்லை என்பதை 'எங்கிட்ட சல்லிக்காசுகூடக் கிடையாது' எனச் சொல்லி நாம் கேட்டிருப்போம். தென் மாவட்டங்களில் இன்றைக்கும் இச்சொற்பயன்பாடு புழக்கத்தில் உண்டு.

சல்லிக் காசு

சல்லி என்பது மன்னராட்சிக் காலங்களில் பயன்பாட்டிலிருந்த நாணயம். சிறியதாக அதிக பட்சம் மில்லிமீட்டர் அளவில் இந்த சல்லி இருக்கும். இந்த சல்லிக்காசுகளை காளைகளின் கொம்புகளுக்கிடையே கட்டி வைப்பார்கள்.

காளையை அணையும் (கவனிக்கவும் 'அடக்கும்' அல்ல) வீரன் துள்ளியோடுகின்ற 'கொல்லேற்றை' அதன் திமிலை இறுகத் தழுவி, கொம்புகளுக்கிடையே இருக்கும் அந்த சல்லிக் காசு முடிப்பை எடுத்து வர வேண்டும். இதுதான் இந்த விளையாட்டின் மிக முக்கியமான கூறு. ஆண்டாண்டு காலமாய் நடைபெற்று வந்த பண்பாட்டு தொன்மம்.

இளைஞனின் வீரம்

இளைஞன் ஒருவன் பருத்த காளையை அணைவது என்பது, அவனது உடல் வலுவை, உள்ள உறுதியை, விடாமுயற்சியை மக்கள் மத்தியில் நிரூபிக்கும் செயல். இன்று 'உலக ஆணழகன் போட்டி' நடைபெறுகிறதே, அதைப் போன்றதுதான் இந்த ஜல்லிக்கட்டு எனும் சல்லிக்கட்டு எனும் ஏறுதழுவுதல் விளையாட்டு.

இளைஞனின் உடற்கட்டைத் தீர்மானிப்பதே ஜல்லிக்கட்டு!

ஏறுதழுவுவதற்காகவே உடற்கட்டோடு எப்போதும் தன்னை ஒரு இளைஞன் பராமரித்துக் கொள்வான்... அதன் மூலம் அவனது தலைமுறை வலுவோடும் நல்ல உடல் நலத்தோடும் திகழும் என்பதற்காகவே, முல்லைத் திணையில் நடைபெற்ற இத்திருவிழாவை அனைத்து நில மக்களுக்குமான விளையாட்டாக நம் முன்னோர்கள் மாற்றம் செய்திருக்கின்றனர்.

ஆக, ஜல்லிக்கட்டு என்பது ஒரு இளைஞனின் உடற்கட்டைத் தீர்மானிக்கும் செயலன்றி வேறு எதுவாக இருக்க முடியும்?

இதையும் படிங்க : 'இவன் என் மகன்! கண்ணும் கருத்துமாக வளர்க்கிறேன்'- ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பாளர் கண்ணகி பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.