மதுரை: கர்நாடகாவில் மாநில கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பு வருவதற்கு அனுமதி மறுப்பது குறித்து, நாட்டில் இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் வகையிலான பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன எனவும்; இஸ்லாமியர்களை ஒடுக்கப்பட்டவர்களாக அடையாளப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது எனவும் ஆல்- இந்திய இமாம் கவுன்சில் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அரபிக்கல்லூரி முதல்வர் முஸ்தபா கமால்தீன், "தேர்தலை முன்வைத்து மக்கள் மத்தியில் இனவேறுபாட்டை உருவாக்கும் வகையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் கூட்டத்தில் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் எனச் சங்க பரிவார் அமைப்பினர், வெளிப்படையாக அறிவிப்பு விடுத்துள்ளது குறித்து அரசியல் தலைவர்கள் கண்டித்துள்ளதோடு நாடாளுமன்றத்திலும் இது குறித்துப் பேசப்பட்டுள்ளது.
இந்த பேச்சுக்கு ஆல்-இந்திய இமாம் கவுன்சில் சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
இதையும்படிங்க: ஹிஜாப் சர்ச்சை... பெங்களூருவில் 144 தடை... குவியும் காவலர்கள்...
கர்நாடகாவில் நடைபெறும் ஹிஜாபிற்கு எதிரான போராட்டத்தைக் கவலையோடு கவனித்துக் கொண்டு இருக்கிறோம். பெண்களுக்கு உரிமை, சொத்து உரிமை வழங்கியது இஸ்லாம், கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறையிலும் முன்னேறி வரும் காலகட்டத்தில் பள்ளிக் கல்வியைத் தடுக்கும் நோக்கில் ஹிஜாப் போராட்டம் முன்னிறுத்தப்பட்டு வருகிறது.
இஸ்லாமியர்களை ஒடுக்கப்படுத்தப்பட்டவர்களாக அடையாளப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இது கண்டனத்துக்குரியது. ஹிஜாப் முக்கியத்துவத்தைச் சகோதர சமுதாயத்தவர்களும் வரவேற்கத் தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதையும் படிங்க: Hijab Issue: 'ஆர்எஸ்எஸ் கலாசாரத்தை கல்வி மையங்களில் பரப்பாதீங்க!'
இஸ்லாமியர்களின் கல்வியைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகாவில் முயற்சி நடைபெறுகிறது. இனப்படுகொலைக்கான முன்னோட்டம் போல உள்ளதோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்பாக நடைபெறக்கூடிய, பல்வேறு கவலைக்குரிய சம்பவங்கள் அதனை உணர்த்துகின்றன. எனவே, இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை ஜனநாயக சக்திகளுக்கு உள்ளது.
இதையும் படிங்க:'நீ உட்காருப்பா முதல்ல...' கர்நாடக பாஜக எம்.பி.க்களுக்கு எதிராக மக்களவையில் சீறிய சு.வெங்கடேசன்!
நாட்டில் இஸ்லாமியர்களைத் தனிமைப்படுத்தும் வகையிலான பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. ஹிஜாப் விவகாரத்தில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல் பாராட்டுதலுக்குரியது.
திருமாவளவன் போன்றோர் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளனர். ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்போம். எதிராக இருந்தால் சட்டரீதியான முயற்சிகளை முன்னெடுப்போம்" என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ஆல் இந்திய இமாம் கவுன்சில் மாநில பொதுச்செயலாளர் அர்ஷத் அஹமது அல்தாஃபி, ’ஆர்.எஸ்.எஸ். பாஜகவிற்கு எதிராகப் பேசினால் குரல் வளையை நெரிக்கும் நிலையை உள்துறை செய்துவருகிறது.
இதையும் படிங்க: Hijab Row: ஹிஜாப் வழக்கு மூன்று நீதிபதி அமர்வுக்கு மாற்றம்
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகளை முடக்க நினைக்கிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடைபெற்றவற்றை நாட்டிற்கு எதிரானது என்பது போன்று சித்தரிக்கின்றனர். இஸ்லாமியர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்க்க மக்களோடு கைகோர்த்து மக்கள் சக்தியை ஒருங்கிணைப்போம்’ என்றார்.