ETV Bharat / state

சட்டவிரோத மணல் விற்பனை: அறிக்கை தாக்கல் மதுரைக் கிளை உத்தரவு!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட திருநெல்வேலி பேருந்து நிலைய கட்டுமானத்தின்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆற்று மணல் கடத்தப்பட்டதாவும், இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரி தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai highcourt
madurai highcourt
author img

By

Published : Dec 17, 2020, 3:02 PM IST

மதுரை: திருநெல்வேலி பேருந்து நிலைய கட்டுமானத்தின்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆற்று மணல் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

மனு தாக்கல்:

திருநெல்வேலியைச் சேர்ந்த சுடலைகண்ணு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், திருநெல்வேலி பேருந்து நிலையம் கட்டும் பணி 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது பேருந்து நிலையத்தில் அடி தளம் அமைக்க சுமார் 30 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டபட்டது. பேருந்து நிலையத்திற்கு அருகே தாமிரபரணி ஆறு உள்ளதால், 30 அடி பள்ளத்தில் ஆற்று மணல் இருந்தன. இதனை நெல்லை மாநகராட்சி அலுவலர்கள் சட்ட விரோதமாக கடத்த முயன்றனர்.

இது தொடர்பாக சமந்தப்பட்ட உயர் அலுவலர்களிடம் மனு அளித்த பின்பு, 30 அடி பள்ளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மணல் ஏலம் விட அறிவிக்கப்பட்டது. ஆனாலும், சில அரசியல் பிரமுகர்கள் உடந்தையோடு குறைந்த மதிப்பில் ஏலம் விடபட்டது. சட்ட விரோதமாக மணல் விற்பனை செய்தவர்கள் மீது சிறப்பு விசாரணை குழு அமைத்து, மணல் கடத்தலுக்கு துணை போன அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

வழக்கறிஞர் ஆணையம்:

இந்த மனுவை ஏற்கனவே விசாரணை செய்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்டது என்ன வகையான மணல், எவ்வளவு மணல் என்பது குறித்து கண்டறிய வழக்கறிஞர் ஆணையம் ஒன்றை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் இந்த வழக்கு மீண்டும் இன்று (டிசம்பர் 17) விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் ஆணையம் சார்பில் சம்பவ இடங்களை முழுமையாக அறிவியல் ரீதியாக ஆய்வு செய்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் குறிப்பிட்ட இடத்தில் தாதுக்கள் நிறைந்த தாமிரபரணி மணல் உள்ளதாகவும் இது 90 விழுக்காடு ஆற்று மணலாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

நெல்லை மாநகராட்சி சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஆய்வின்போது ஆழ்துளை அமைத்து மணல் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் பல்வேறு வகையான மணல் இருந்துள்ளது. எனவே இந்த மணல் கட்டுமான பயன்பாட்டிற்கு உகந்ததல்ல என்று வாதிட்டார்.

தீர்ப்பு ஒத்திவைப்பு:

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பாக என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, காவல்துறையினர் எத்தனை வழக்குப்பதிவு செய்துள்ளனர், எத்தனை லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, பதிவு செய்யப்பட்ட வழக்கின் நிலைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: கடத்தல் டிராக்டரை மடக்கிப் பிடித்த சார் ஆட்சியர்: அதிமுக நிர்வாகி மீது வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.