ETV Bharat / state

'ரஜினி குறித்தெல்லாம் கருத்து கூறமுடியாது' - அமைச்சர் உதயகுமார் - ரஜினி மீதான வழக்கு தள்ளுபடி

மதுரை: ‘நடிகர் ரஜினிகாந்த் மீதான வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருப்பதைப் பற்றி நாம் கருத்து கூற முடியாது. அது நீதிமன்றத்தின் தனிப்பட்ட விஷயம்’ என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

admk minister udhyakumar
அமைச்சர் உதயகுமார்
author img

By

Published : Jan 25, 2020, 1:16 PM IST

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "திருமங்கலத்தில் துணைக்கோள் நகரம் மிக விரைவில் அமையும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. திருமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு, தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை என்று எம்.பி. மாணிக்தாகூரின் குற்றச்சாட்டு மிகத்தவறானது. அடிப்படை விஷயங்கள் தெரிந்த பின்புதான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பேசவேண்டும். ரயில்வே துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி நகரின் முக்கிய பகுதி என்பதால் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்துவிட்டு அதற்குப் பிறகு இந்தப் பணிகளை தொடங்க பேசி வருகிறோம். மிக விரைவில் அந்தப் பணி சீராக முடியும் என்பதில் மாற்றமில்லை" என்று உறுதியளித்தார்.

அமைச்சர் உதயகுமார்

கே.சி.பழனிச்சாமி கைது குறித்த கேள்விக்கு, "அதுகுறித்து எனக்கு தெரியவில்லை. அதைப் பற்றி நான் பதில் சொல்ல விரும்பவில்லை. பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருப்பதைப் பற்றி நாம் கருத்து கூற முடியாது. அது நீதிமன்றத்தின் தனிப்பட்ட விஷயம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கை நடத்தியவர் டிடிவி’ - புகழேந்தியின் புது குண்டு!

Intro:*திருமங்கலத்தில் துணைக்கோள் நகரம் மிக விரைவில் அமையும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி*Body:*திருமங்கலத்தில் துணைக்கோள் நகரம் மிக விரைவில் அமையும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி*

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் புதிய தார் சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால் அமைத்தல் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்து கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறும்போது:

மிக விரைவில் திருமங்கலத்திற்கு புதிய பேருந்து நிலையம் ரூ.22 கோடியிலிருந்து ரூ.25 கோடி அதிகரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான டெண்டர் விடும் பணிகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

கே.சி.பழனிச்சாமி கைது பற்றி எனக்கு தெரியவில்லை அதைப் பற்றி நான் பதில் சொல்ல விரும்பவில்லை.

திருமங்கலத்தில் துணைக்கோள் நகரம் மிக விரைவில் அமையும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் மீதுள்ள வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருப்பதைப் பற்றி நாம் கூற முடியாது அது நீதிமன்றத்தின் தனிப்பட்ட விஷயம்.

திருமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை என்ற எம்பி மாணிக்கதாகூர் குற்றச்சாட்டு மிகுந்த தவறானது அடிப்படை விஷயங்கள் தெரிந்த பின்புதான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பேசவேண்டும். அதை தவிர்த்துவிட்டு வீணான குற்றச்சாட்டுகளை வைப்பது தவறு.

ரயில்வே துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி நகரின் முக்கிய பகுதி என்பதால் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து விட்டு அதற்குப் பிறகு இந்த பணிகளை தொடங்க பேசி வருகிறோம், மிக விரைவில் அந்த பணி சீராக முடியும் என்பதில் மாற்றமில்லை.

_அமைச்சர் கருப்பணன் திமுக வென்றுள்ள ஊரக உள்ளாட்சி இடங்களுக்கு குறைவான நிதி ஒதுக்கப்படும் என்று சொல்லியுள்ள கேள்விக்கு_

அனைத்து ஊரக உள்ளாட்சிகளுக்கு தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேவையான நிதிகளை ஒதிக்கி கிராமங்களின் வளர்ச்சிக்கு பாடுபடுவார், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றவர்களின் கருத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளுவதில்லை என தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.