பரப்புரைக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எனது ஆதரவை தெரிவிக்கும் வகையில், தற்போது மதுரையில் போட்டியிடும் எனது நண்பரானும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளருமான வெங்கடேசனுக்கு ஆதரவு கேட்டு பரப்புரை மேற்கொள்ள இருக்கிறேன். எதிரிகள் தோற்க வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவோம், ஆனால் தற்போது உள்ள எதிரிகள் படுதோல்வி அடைய வேண்டும். இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதால், அவர்கள் செல்லும் இடங்கள் எல்லாம் அதிமுகவிற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் சிலர் கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடுகிறார்கள், ஆனால் நான் கட்சி இல்லாததால் வெங்கடேசனை ஆதரிக்கின்றேன். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார்.