தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்தினருடன் தரிசனம் மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் அமைய வேண்டி குடும்பத்துடன் வந்து வழிபட்டோம். அதிமுக ஆட்சியில்தான் தமிழ்ப்புத்தாண்டு சித்திரை 1ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் அமைதியான நல்லாட்சி தொடர்ந்து, கரோனாவின் இரண்டாம் அலையில் இருந்து மக்கள் விரைவில் விடுபட வேண்டும் என வேண்டிக்கொண்டேன். முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று பெருவாரியான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். இதுவும் முதல்வருக்கு ஒரு வெற்றியே” என்றார்.
இதையும் படிங்க : சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு ரத்து