ETV Bharat / state

முதல்வரை நான் சந்தித்தேனா? நான் அரசியலை விட்டு விலக தயார்..! - தொண்டர்களுக்கு நன்றாக தெரியும்

முதல்வரை நான் சந்தித்ததாக ஈபிஎஸ் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார் நிரூபிக்கவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமி அரசியலை விட்டு விலகத் தயாரா என ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார்.

நான் அரசியலை விட்டு விலக தயார்
நான் அரசியலை விட்டு விலக தயார்
author img

By

Published : Oct 20, 2022, 10:41 PM IST

மதுரை: சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசிய அவர், தேவரின் தங்க கவசத்தைப் பொறுத்தமட்டில் அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது நீதிமன்றம் கருத்தின் அடிப்படையில் நாங்கள் முடிவெடுப்போம்.

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சிலர் நீதிமன்றத்திற்குப் போவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இந்த வழக்கு முடிவு பெறுகின்ற வரையில் நான் கருத்து கூற விரும்பவில்லை என்றார்.

திமுகவின் பீ டீம் என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, ஆரம்பத்திலிருந்து அவருடைய நடவடிக்கை என்ன என்பதை நீங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள். யார் மீது குற்றம் என்பதைத் தமிழக மக்கள் நன்றாகக் கணித்து வைத்திருக்கிறார்கள். நேற்று கூட அவர் பொதுவாக நான் சட்டமன்றத்தில் அரை மணி நேரம் முதல்வரைச் சந்தித்துப் பேசியதாகச் சொல்லி இருக்கிறார்.

அது முற்றிலும் தவறானது உண்மைக்குப் புறம்பானது. முதல்வரை நான் சந்தித்ததை அவர் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார் நிரூபிக்கவில்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமி அரசியலை விட்டு விலகத் தயாரா எனக் கேள்வி எழுப்பினார்.

அதிமுக தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் எம்ஜிஆர் இந்த இயக்கத்தை உருவாக்கினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல தியாகங்களைச் செய்துதான் இந்த இயக்கத்தை வழிநடத்தியுள்ளார். 50வது ஆண்டு பொன்விழாவைத் தொண்டர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்ற நேரத்தில் பல பிரச்சனைகளை விரும்பத் தகாத பிரச்சனைகளை யார் உருவாக்கினர் என்பது நாட்டு மக்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றாகத் தெரியும்.

இவ்வளவு பெரிய செயலை பாவத்தைச் செய்து விட்டு அடுத்தவர் மீது பழி போடுவது என்பது ஏற்புடையதல்ல. பொதுவாகவே மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவிகளை வாங்கியது யார், நம்பிக்கை துரோகம் செய்தது யார் என்றும், அரசியல் தெரிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

என்னைப் பற்றி தொண்டர்களுக்கு நன்றாகத் தெரியும், தொண்டர்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் உரிய நேரத்தில் அவர்களை அணுகுவேன். அதிமுக இணையும் என்பதில் உறுதியாக உள்ளேன் என்றார்.

இதையும் படிங்க: மருத்துவப் படிப்புகளுக்கான ஓபிசி இடஒதுக்கீட்டில் விதிமீறல் - சு. வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.