மதுரை பழங்காந்நத்தம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கட்டட ஒப்பந்ததாரராகப் பணியாற்றி வருகிறார். இவர் மனைவி சபரிமணி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
வழக்கம்போல நேற்றிரவு (ஏப்ரல் 12) குடித்துவிட்டு வந்து மனைவியிடம் கடும் வாக்குவாத்தில் ஈடுப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 13) அதிகாலை 4 மணியளவில் கழிவறைக்கு செல்வதாகக் கூறி மனைவி சபரிமணி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை பார்த்த கணவர் மணிகண்டன் அவரை காப்பாற்ற முயன்றபோது இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர். தற்போது சிகிச்சையில் உள்ள இருவரும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ’ஸ்புட்னி வி’ தடுப்பூசி: ஆண்டுக்கு 85 கோடி டோஸ்கள் உற்பத்தி செய்யவுள்ள இந்தியா!