ETV Bharat / spiritual

"முருகா முருகா முருகா முருகா அரகரோகரா" - கந்த சஷ்டி விழாவில் கவனத்தை ஈர்த்த 7 வயது சிறுமி!

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியில் நடைபெற்ற ஆன்மீக பாடல் கச்சேரியில் முருகன் பாடல்களை பக்தி பரவசத்துடன் பாடி முருக பக்தர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் 7 வயது சிறுமி தியா.

Kanda Sashti Festival 2024
சிறுமி தியா (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2024, 9:36 PM IST

தூத்துக்குடி: தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா இந்த மாதம் 02ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி, நாளை (நவ.08) வரை நடைபெறுகிறது.

இதன் தொடர்ச்சியாக, கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா இன்று (நவ.07) திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் பக்தர்களின் கூட்டத்தில், அரகரோகரா கோசத்திற்கு மத்தியில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிலையில், கந்த சஷ்டி விழாவின் ஒரு பகுதியாக தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள் கோயில் அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கலையரங்கத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சூரசம்ஹார நிகழ்ச்சியான இன்று (நவ.07) 7 வயது சிறுமியான தியாவின் ஆன்மீக பாடல் கச்சேரி நடைபெற்றது.

சிறுமி தியாவின் ஆன்மீக பாடல் கச்சேரி (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது, சிறுமி தியா கந்த சஷ்டி விழா குறித்தும் சூரசம்ஹார நிகழ்வு குறித்தும் பாடலாக விவரித்து பாடினார். மேலும், முருகனின் பாடல்களை மிகவும் அருமையாகவும், அழகான முகபாவனைகளுடனும் பாடி அசத்தினார். அதிலும் குறிப்பாக, 'முருகா முருகா முருகா முருகா அரகரோகரா' என்ற பாடலை அங்கிருந்த பக்தர்கள் கண்ணிமைக்காமல் கண்டு ரசித்தனர்.

இதையும் படிங்க: சூரசம்ஹாரத்தை காண வந்தபோது தொலைந்து போன பொருட்கள் முருகன் அருளால் மீண்டும் கிடைத்தது.. பக்தர் நெகிழ்ச்சி!

இதுமட்டும் அல்லாது, குழந்தை தியாவின் பாடல் பொதுமக்களையும், முருக பக்தர்களையும் வெகுவாக கவர்ந்தது. இதனால், 7 வயது சிறுமி தியா பாடல்களை பாடி முடித்த பின்னர் அங்கிருந்த முருக பக்தர்கள் அனைவரும் சிறுமி தியாவை பாராட்டினர்.

மேலும், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் கலந்துகொண்டு முருகன் பாடல்களை பக்தி பரவசத்துடன் பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்தான் இந்த 7 வயது சிறுமி தியா என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.