ETV Bharat / state

தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றாத திமுக புதிய திட்டங்களை எவ்வாறு நிறைவேற்றும்? - ஓபிஎஸ் கேள்வி - opanneerselvam quest

தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றாத திமுக அரசு புதிய திட்டங்களை எவ்வாறு நிறைவேற்றும் என எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றாத திமுக புதிய திட்டங்களை எவ்வாறு நிறைவேற்றும்? - ஓபிஎஸ் கேள்வி

author img

By

Published : May 11, 2022, 10:12 PM IST

மதுரை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது பேசிய நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் உள்ளதாக பல்வேறு விளக்கங்களை அளித்தார்.

இதற்கு எதிர்க்கட்சியான அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவை மானியக்கோரிக்கை விவாத நிழ்வுகளில் கலந்து கொண்ட நிலையில், சட்டப்பேரவை நிறைவடைந்து தனது சொந்த மாவட்டத்திற்கு செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றாத திமுக புதிய திட்டங்களை எவ்வாறு நிறைவேற்றும்? - ஓபிஎஸ் கேள்வி

அப்போது மதுரை விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதியத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்த நிலையில், அதிலிருந்து திமுக நழுவிக்கொண்டுள்ளனர். பழைய ஒய்வூதியத் திட்டம் குறித்து திமுகவிடம் தான் கருத்து கேட்க வேண்டும். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும். அதனை நிறைவேற்ற முடியாத திமுக அரசு, புதிய திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தப்போகிறது?” எனக் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: எம்ஜிஆர் கட்சியை விட்டு போன போதே கவலை படவில்லை, வைகோவை தூக்கி எறிந்தோம் - ஆர்.எஸ் பாரதி அதிரடி பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.