ETV Bharat / state

விரைவாக பாஸ்போர்ட் பெறுவது எப்படி? - மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி வசந்தன் கூறிய தகவல்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 5:05 PM IST

Updated : Jan 3, 2024, 5:27 PM IST

Digilocker App for quick passport: மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி வசந்தன், டிஜிலாக்கர் மூலம் ஆவணங்களை இணைத்தால் பாஸ்போர்ட் விரைவில் கிடைக்கும் எனத் தெரிவித்தார்.

Digilocker App for quick passport
மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி

மதுரை: மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன், மதுரை ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் இன்று (ஜன.3) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் 2 லட்சத்து 65 ஆயிரத்திற்கும் அதிகமாக பாஸ்போர்ட் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மதுரை பாஸ்போர்ட் அலுவலகம், தென்தமிழ்நாட்டிலுள்ள 10 மாவட்ட விண்ணப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட் சேவைகளை வழங்கி வருகிறது.

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ், மதுரை மற்றும் திருநெல்வேலியிலுள்ள பாஸ்போர்ட் சேவை மையங்கள் மேலும் 8 தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்களின் வழியாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை சமர்ப்பித்தவுடன், காவல்துறை அறிக்கை வேண்டி இணையதளத்தின் மூலமாக அந்தந்த விண்ணப்பதாரரின் முகவரியின் கீழ் அமைந்துள்ள காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. காவல்துறை அறிக்கையானது, மாவட்ட ஆணையர் அல்லது கண்காணிப்பாளர் அலுவலகத்தின் மூலம் இணையதளத்தின் வழியாக, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பாஸ்போர்ட் பெற தடையின்மை அனுப்பி, அதன் சான்று இணையதளத்தின் வாயிலாக பெறப்பட்டவுடன், வரிசைப்படி பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு விரைவு அஞ்சல் (ஸ்பீடு போஸ்ட்) மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. தினந்தோறும் ஆயிரத்து 500 விண்ணப்பதாரர்கள், அவர்களது விண்ணப்பத்தினை பாஸ்போர்ட் சேவை மையங்களில் சமர்ப்பித்து வருகின்றனர்.

5-லிருந்து 10 நாட்களுக்குள் காவல்துறை ஒத்துழைப்பால் அறிக்கை பெறப்பட்டு, பாஸ்போர்ட் உடனடியாக விண்ணப்பதாரர்களுக்கு விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. தட்கல் முறையில் தினமும் 80 விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தட்கல் முறையில் விண்ணப்பிக்கும்போது, அனைத்து விவரங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில், பாஸ்போர்ட் அடுத்த நாளே விண்ணப்பதாரர்களுக்கு கிடைக்கும்.

மேலும் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், பாஸ்போர்ட் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்வதற்கு எவ்வித முன் அனுமதியும் பெறாமல், அனைத்து வேலை நாட்களிலும் புதன்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 9.30 மணி முதல் 12 மணி வரை, மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தினை அணுகலாம். இதன் மூலம் கடந்த ஆண்டு மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேலான விண்ணப்பதாரர்கள் பயன் பெற்றுள்ளனர்.

மேலும் தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் சமுக வலைத்தளங்கள் மூலமாக 2023ஆம் ஆண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறைகளுக்கு, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் பொதுமக்கள் குறைதீர்ப்பு பிரிவு மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொதுமக்கள் குறைதீர்ப்பு சிறப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டு, பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் குறைகளை விரைவாக சரி செய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய உலகமயமாதல் மற்றும் இந்தியாவின் முன்னேற்றத்தையும், அதில் நமது மாணவர்களின் பங்களிப்பையும் கருத்தில் கொண்டு, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, மாணவர்களுக்கு விரைவாக பாஸ்போர்ட் கிடைக்கப் பெறவதற்கான வழிவகையையும் மேற்கொண்டுள்ளது.

அதில் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளைப் பற்றி மாணவர்களுக்கு தெரியப்படுத்தவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது தேவையான வழிமுறைகளை தெரிந்து கொள்ளவும், மாணவர்களுக்கு "மாணவர் இணைப்புத் திட்டம்" செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் உலகளாவிய கற்றல் மற்றும் நம்பிக்கைக்குரிய வாழ்க்கையை நோக்கி மாணவர்கள் செல்வதற்கும் பயன்படுகிறது. இதை மேலும் விரிவுபடுத்தும் விதமாக, கல்லூரிகளுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது "டிஜிலாக்கர்" (Digilocker) பிளாட்பார்ம் ஆவணங்களை பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரர்கள் இணைத்துவிட்டால், பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு நேரில் வரும்போது அசல் ஆவணங்களை கையில் எடுத்து வர வேண்டிய அவசியம் ஏற்படாது.

"டிஜிலாக்கர்" மூலம் ஆவணங்களை இணைப்பதால், காலதாமதமின்றி விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, பாஸ்போர்ட் விரைவாக கிடைப்பதற்கு ஏதுவாகவுள்ளது. எனவே, இந்த வாய்ப்பினை மாணவர்கள் மற்றும் இதர விண்ணப்பதாரர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார். இந்த நிகழ்வின்போது உதவி பாஸ்போர்ட் அலுவலர் எஸ்.அழகேசன் உடன் இருந்தார்.

இதையும் படிங்க: "இயக்குநர் லோகேஷ் கனகராஜிக்கு உளவியல் சோதனை செய்ய வேண்டும்" - மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Last Updated : Jan 3, 2024, 5:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.