ETV Bharat / state

போதைப்பொருள் வழக்கில் குண்டர் சட்டத்தில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி

'போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதனாவர்கள் மற்றும் அவரது சொத்துகளைப் பறிமுதல் செய்வது குறித்து முதலமைச்சர் வெள்ளை அறிக்கை விட முன்வருவாரா?' என‌ எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

போதைப்பொருள் வழக்கில் குண்டர் சட்டத்தில் எத்தனை பேர் செய்யப்பட்டுள்ளனர்?- ஆர் பி உதயகுமார் கேள்வி

author img

By

Published : Aug 11, 2022, 5:31 PM IST

மதுரை திருவேடகம் அருகே வைகை ஆற்றில் சிக்கி உயிரிழந்த, ராணுவ வீரர் வினோத்குமார் உடல் மீட்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரின் உடலுக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செய்து, குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ”கடந்த 3 தினங்களுக்கு முன்பாக, வைகை ஆற்றில் 6 பேர் குளிக்கச்சென்றனர். இதில் நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டு, இருவர் நீரில் மூழ்கி பலியாகினர். இதில் ஒருவர் உடல் மீட்கப்பட்டது, ராணுவ வீரர் வினோத்குமார் உடல் கிடைக்காமல் இருந்தது.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரிடம் வைகை ஆற்றில் வரும் நீரைக் குறைத்தால், எளிதாக மீட்கலாம் என்று கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் நீரின் அளவைக் குறைத்தார். இதில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் தேசியப்பேரிடர் மீட்புப்படைக்கு இணையாக உருவாக்கப்பட்ட, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் உடலை கண்டெடுத்தனர்.

ஏற்கெனவே பலமுறை அரசுக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், இதுபோன்ற காலங்களில் ஆற்றின் கரையோரங்களில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

வேலைவாய்ப்பின்மையால் திசைமாறும் இளைஞர்கள்: முதலமைச்சர் போதை ஒழிப்பு குறித்து கலைவாணர் அரங்கத்தில் ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார். தமிழ்நாட்டிலேயே ஒரு கோடியே 75 லட்சம் இளைஞர்கள் உள்ளனர். இதில் 90 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காகப்பதிவு செய்து, காத்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் மனம் அழுத்தத்தால், குடும்பச்சுமையால், கூடா நட்பால் போதைப்பொருட்களுக்கு அடிமையாக வருகின்றனர்.

ஏற்கெனவே சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர், திமுக ஆட்சி அமைந்த 5ஆவது மாதத்திலே, தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும் இது குறித்து சட்டப்பேரவையிலும் கொலை, கொள்ளை, பாலியல் போன்றச்சம்பவங்கள் போதைப்பொருட்களால் நடைபெறுகிறது என்று ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினார்.

ஆர்.பி. உதயகுமார் பேட்டி

எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? முதலமைச்சர் பேசிய வார்த்தை அழகாக உள்ளது. ஆனால், செயல்பாட்டில் என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. போதைப்பொருள் குறித்து முதலமைச்சர், காவல் துறைக்கு உத்தரவிட்டாலே போதும். ஒரே நாளில் தடுத்து நிறுத்த முடியும்.

இது குறித்து விழிப்புணர்வு நடத்தப்படும் என்று கூறுகிறார், இது காலங்காலமாக நடைபெற்று வருகிறது. ஏன் டாஸ்மாக் கடையில் கூட இது குறித்து விழிப்புணர்வு எழுதி வைத்திருப்பார்கள். விழிப்புணர்வில் சட்டப்பேரவை உறுப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது.

சமூக அக்கறையோடு அரசு இதில் தீவிரம் காட்டவேண்டும். குறிப்பாக, பள்ளி ,கல்லூரி வாசல்களில் போதைப்பொருள் விற்பதை தடுத்து நிறுத்த வேண்டும். குறிப்பாக அண்டை மாநிலங்களில் இருந்து அதிக அளவில் போதைப்பொருள் கடத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்த போதைப்பொருள் வழக்கில் குண்டர் சட்டத்தில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் போதைப்பொருள் விற்பனை செய்பவரில் எத்தனை பேரின் சொத்துகள் முடக்கப்பட்டன என்பதை வெள்ளை அறிக்கை வெளியிட முதலமைச்சர் முன்வர வேண்டும்.

கனமழையால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு வேண்டும் நிவாரணம்: தமிழ்நாட்டில் ஒரு கோடியே 75 லட்சம் இளைஞர்கள் உள்ளதில் ஏறத்தாழ 50 லட்சம் இளைஞர்கள் போதைப்பொருளால் பாதிக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள்கள் விற்பனை செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்.

குறிப்பாக போக்சோ வழக்கில் கைதானவர்களும், கூட்டு பலாத்காரம் வழக்கில் கைதானவர்களும் போதை மருந்து உட்கொண்டோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து வருகின்றனர். ஆகவே, தமிழ்நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தை இளைஞர்களுக்கு உருவாக்கும் வண்ணம், போதை மருந்து தடுப்பதில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் ஏற்கெனவே மதுரையில் கனமழையால் உயிரிழந்த நான்கு குடும்பத்திற்கு இதுவரை நிவாரண உதவி வழங்கப்படவில்லை. தற்போது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக ஒரு ராணுவ வீரருக்குத் திருமணமாகி ஒரு வருடம் தான் ஆகிறது. ஆகவே இருவரின் குடும்பச் சூழ்நிலையினைக் கருதி உயிரிழந்த இரண்டு குடும்பங்களுக்கும், தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை வழங்கிட அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”, என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: "அமமுக பொதுக்குழுவிற்கு ஓபிஎஸ் அழைக்கப்படுவார்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.