ETV Bharat / state

ரயில் சேவைகளுக்கு இந்தி பெயரா? - உயர்நீதிமன்றம் அதிரடி - வைகை

தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்களுக்கும் முன்பு போல் வைகை, பாண்டியன் போன்ற தமிழ் பெயர்கள் வைக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு முதன்மை செயலர், தமிழ் வளர்ச்சித் துறை செயலர், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
author img

By

Published : Oct 20, 2022, 10:32 PM IST

மதுரை: திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்,"மத்திய அரசு இந்தியா முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த திட்டங்களை செயல்படுத்தும் போது இந்தியில் தான் பெயர் வைக்கப்படுகிறது.

அந்த திட்டங்களை தமிழ் நாட்டில் அமல்படுத்தும் போது தமிழக அரசின் விளம்பரங்கள் மற்றும் செய்தி குறிப்புகளில் மேற்படி திட்டங்களை அப்படியே தமிழ் மொழியில் எழுதுகிறார்கள் (உதாரணமாக பிரதான் மந்திரி முந்த்ரா யோஜனா). இவ்வாறு தமிழில் எழுதுவதால் தமிழர்களுக்கு அதன் அர்த்தம் புரியாது. தமிழில் எழுதி உள்ளதால் இந்தி மொழி மட்டும் அறிந்தவர்களும் படிக்க இயலாது.

அதே போல் LIC நிறுவனமும் பாலிசிகளுக்கு இந்திப் பெயர்களைத் தான் வைக்கிறார்கள். மேலும் முன்பு தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்களுக்கு வைகை, பல்லவன், பாண்டியன், பொதிகை என்று பெயர் வைத்தனர். தற்போது அந்தோதையா, தேஜஸ், டோரன்டோ மற்றும் சுவேதா எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைக்கிறார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, தமிழ் நாட்டில் ஏற்கனவே அமலில் இருக்கும் மற்றும் எதிர் வரும் நாட்களில் அமல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்களை தமிழ் மொழியில் மொழிப் பெயர்த்து அறிவிக்கவும், மேலும் ரயில்களுக்கும் முன்பு போல் தமிழ் பெயர்கள் வைக்கவும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழ்நாடு முதன்மை செயலர், தமிழ் வளர்ச்சித் துறை செயலர், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் பணியில் நீடிக்கத் தகுதியில்லை; மறு ஆய்வு கோரிய மனு தள்ளுபடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.