ETV Bharat / state

ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் - இந்தி மொழியால் நேர்ந்த பெருங்குழப்பம்!

மதுரை: இந்தியில் தகவல் பரிமாற்றம் நடந்ததால் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிரெதிரே பயணிக்க நேர்ந்தாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

File pic
author img

By

Published : May 10, 2019, 3:09 PM IST

Updated : May 10, 2019, 5:20 PM IST

மதுரையிலிருந்து விருதுநகர் மார்க்கமாக செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயில் நேற்று மாலை அரை மணி நேரம் தாமதமாக திருமங்கலம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.

இதற்கு நேர் எதிரே செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு மதுரை செல்லும் பயணிகள் ரயில் கள்ளிக்குடி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

மேற்கண்ட இரண்டு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே பயணம் செய்வதை அறிந்த அலுவலர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து இரு ரயில்களின் ஓட்டுநர்களை தொடர்பு கொண்டு உடனடியாக ரயில்களை நிறுத்துமாறு உத்தரவிட்டனர். தொடர்ந்து இரண்டு ரயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.

பின் இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கள்ளிக்குடியில் பணியில் இருந்த நிலைய அலுவலர் தீப்சிங் மீனா இந்தியில் தகவலை கூறியதாகவும், அவரது தகவலை திருமங்கலம் நிலைய அலுவலர் ஜெயக்குமார் தவறாக புரிந்து கொண்டதால் இச்சம்பவம் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இச்சம்பவத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாகக் கூறி கள்ளிக்குடி நிலைய அலுவலர் தீப்சிங் மீனா, திருமங்கலம் நிலைய அலுவலர் ஜெயக்குமார் ஆகிய இருவரும் தென் மண்டல ரயில்வே கோட்ட மேலாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இன்று விசாரணை நடைபெற்ற நிலையில், மேற்கண்ட இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உயர் அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

மதுரை அருகே ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் - இந்தி மொழியால் நேர்ந்த பெருங்குழப்பம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிரெதிரே பயணிக்க நேர்ந்து, பெரும் விபத்திலிருந்து தப்பித்துள்ளது. இந்தி மொழியில் தகவல் கூறியதால் நேர்ந்த பெருங்குழப்பமே இதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.

மதுரையிலிருந்து விருதுநகர் மார்க்கமாக செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயில் நேற்று மாலை அரை மணி நேரம் தாமதமாக திருமங்கலம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. இதற்க நேர் எதிரே செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு மதுரை செல்லும் பயணிகள் ரயில் கள்ளிக்குடி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

மேற்கண்ட இரண்டு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே பயணம் செய்வதை அறிந்த அதிகாரிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து வாக்கிடாக்கியில் தொடர்பு கொண்டு உடனடியாக ரயில்களை நிறுத்துமாறு உத்தரவிட்டனர். பிறகு இரண்டு ரயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர்.

பெரும் விபத்துக்கான வாய்ப்பு தடுக்கப்பட்டாலும்கூட, பிறகு நடத்தப்பட்ட விசாரணையில், கள்ளிக்குடியில் பணியில் இருந்த நிலைய அதிகாரி தீப்சிங் மீனா இந்தியில் தகவலை கூறியதாகவும், அவரது தகவலை தண்டவாளத்தில் இருந்த ஜெயக்குமார் தவறாக புரிந்து கொண்டதால் இச்சம்பவம் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து இச்சம்பவத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாகக் கூறி கள்ளிக்குடி நிலைய அதிகாரி தீப்சிங் மீனா, திருமங்கலம் நிலைய அதிகாரி ஜெயக்குமார் ஆகிய இருவரும் தென் மண்டல ரயில்வே கோட்ட மேலாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இன்று விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மேற்கண்ட இருவர் மீது என்னவிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது இன்று மாலை தெரியவரும்.

(மதுரை ரயில் நிலைய கோப்புக் காட்சிகளை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன்)
Last Updated : May 10, 2019, 5:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.