கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது. ஊரடங்கின் ஒருபகுதியாக மக்கள் அதிகமாகக் கூடும் மத வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. இச்சூழலில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மே 25ஆம் தேதி திங்கள் கிழமை பள்ளிவாசல்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரை இரண்டு மணிநேரம் ஈத் பெருநாள் தொழுகை நடத்த அனுமதி வழங்ககோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத ரீதியான வழிபாடுகளுக்கு மத்திய, மாநில அரசுகள்தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: பள்ளி வாசல்களில் ரமலான் கஞ்சிக்கு தடை!