மதுரை: தேனி - போடிநாயக்கனூர் இடையே அகல ரயில் பாதைப் பணிகள் முடிவடைந்து கடந்த டிசம்பர் 2 அன்று அதிவேக ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த 15 கி.மீ. தூரத்தை 120 கி.மீ. வேகத்தில் ரயில் இன்ஜின் 9 நிமிடங்கள் 20 நொடிகளில் கடந்தது.
இந்நிலையில் ரயில் பாதையில் ரயில் செல்லும் போது அதிர்வுகள் ஏற்படுகிறதா, வேறு எதுவும் சிறு குறைபாடுகள் இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க நவீன ஆய்வு ரயில் பெட்டி (Oscillation Monitoring Car) ஒன்று இந்த ரயில் பாதையில் பயன்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படவுள்ளது. ஆய்வு முடிவுகளை இந்தப் பெட்டியில் உள்ள கணிப்பொறி உடனுக்குடன் பதிவு செய்து வெளியிடும்.
இந்த நவீன ஆய்வு ரயில் பெட்டியுடன் 125 கிலோமீட்டர் வேகத்தில் டிசம்பர் 9 அன்று தேனி - போடிநாயக்கனூர் புதிய ரயில் பாதையில் ஆய்வு நடத்தப்பட இருக்கிறது. இந்த ஆய்வு டிசம்பர் 9 அன்று மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த நேரத்தில் பொதுமக்கள் ரயில் பாதையை நெருங்கவோ, கடக்கவோ வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: ரெப்போ வட்டி 0.35 சதவீதம் உயர்வு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு