ETV Bharat / state

மணல் கடத்தலின்போது பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளை உரிமையாளரிடம் ஒப்படைக்க உத்தரவு!

மாட்டு வண்டி மணல் கடத்தலின்போது பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளை உரிமையாளரிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Highcourt
Highcourt
author img

By

Published : Sep 10, 2022, 6:45 PM IST

மதுரை: தஞ்சாவூர் திருவையாறு பகுதியை சேர்ந்த ரகுபதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியதாக காவல்துறையினர் என்னை கைது செய்தனர். அப்போது, எனது மாட்டு வண்டி மற்றும் மாடுகளையும் பறிமுதல் செய்தனர். ஆனால், எனது மாடுகளை கைப்பற்றியதாக, வழக்கில் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மாடுகளை என்னிடம் ஒப்படைக்க கோரி மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது மாடுகளை மீட்டு என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரை கைது செய்யும்பொழுது மாடுகளை கூட்டிச் செல்ல எந்த ஒரு நபரும் அங்கு இல்லாத காரணத்தினால் மாடுகளை பராமரிப்பதற்காக கோ-சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, கோ- சாலையிலுள்ள மாடுகளை மனுதாரரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். கோ- சாலையில் மாடுகள் இருந்ததற்காக நாள் ஒன்றுக்கு 250 ரூபாய் வீதம் பராமரிப்பு கட்டணம் செலுத்தி மாடுகளை மனுதாரர் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: குற்றம்சாட்டப்பட்டவர்களை துன்புறுத்தும் காவல்துறை... நீதிமன்றம் அதிருப்தி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.