இலங்கை கொழும்புவை சேர்ந்தவர்கள் சங்க சிரந்தா, முகமது சப்ராஸ். இவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் தஞ்சமடைந்து, போலி ஆதார் அட்டையை தயாரித்ததாக ராமநாதபுரம் கேணிக்கரை காவல்துறையினர் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது இலங்கையிலும் வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் தங்களை, தங்கள் நாடான இலங்கைக்கு அனுப்பக்கோரி இருவரும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இதையடுத்து ராமநாதபுரம் நீதிமன்றத்தில் அவர்கள் இருவரும் தாக்கல் செய்திருந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. அதன் பிறகு அவர்கள் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இடைபட்ட நேரத்தில் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு நிலுவையில் இருக்கும் போது எவ்வாறு அவர்கள் விடுவிக்கப்பட்டனர், நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்புடையது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். மேலும் அவர்கள் தற்போது எங்கு உள்ளார்கள் என அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இலங்கையை சேர்ந்த 2 பேர் தமிழ்நாட்டில் இருந்து தப்பி சென்ற விவகாரத்தில் ராமநாதபுரம் எஸ்.பி. அலட்சியமாக செயல்பட்டுள்ளார். முகம்மது சப்ரஸ் இலங்கை சென்று விட்டாரா என்று அறிக்கை தாக்கல் செய்ய ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவில் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் அலட்சியமாக செயல்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு குறித்த நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டத்தின் பேரில் மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்ப ஏன் ராமநாதபுரம் எஸ்.பி. தாமதம் படுத்தினார். இதுகுறித்து ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கில் தமிழ்நாடு உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தை தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக சேர்த்துள்ளது என உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கடற்கரையோரம் தற்காலிக கடைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது ?